close
Choose your channels

சாண்டி மாஸ்டரின் லாலா பாப்பாவின் பிறந்தநாள்: வைரலாகும் புகைப்படங்கள்!

Wednesday, May 26, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல டான்ஸ் மாஸ்டரும் பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவருமான சாண்டி மாஸ்டர் மகளின் மூன்றாவது பிறந்தநாள் குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகின்றன

சாண்டி மாஸ்டர்-சில்வியா தம்பதிகளுக்கு கடந்த 2018ஆம் ஆண்டு மே மாதம் 23ஆம் தேதி பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு லாலா என்று பெயரிட்டனர். மே மாதம் குழந்தை பிறந்த நிலையில் சாண்டி மாஸ்டர் ஜூன் மாதம் பிக்பாஸ் நிகழ்ச்சி சென்றுவிட்டார். இதுகுறித்து அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியின் அடிக்கடி கூறிக் கொண்டு இருப்பார் என்பதும் குழந்தை தனது முகத்தை கூட சரியாக பார்க்கவில்லை என்று வருத்தத்துடன் கூறி இருப்பார் என்பது தெரிந்ததே. மேலும் சில்வியாவும், லாலாவும் பிக்பாஸ் விட்டிற்கு வந்தபோது சாண்டி மாஸ்டர் உணர்ச்சி வசப்பட்டு ஆனந்தக்கண்ணீர் சிந்தினார் என்பதும் அந்த நிகழ்ச்சியின் ஒரு ஹைலைட்.

இந்த நிலையில் சாண்டி மாஸ்டரின் லாலா பாப்பாவுக்கு மூன்றாவது பிறந்தநாள் சமீபத்தில் கொண்டாடப்பட்டது. இதுகுறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.