பிக்பாஸ் சித்தப்புவை சந்தித்த 'வி ஆர் பாய்ஸ்'
பிக்பாஸ் நிகழ்ச்சியில் சர்ச்சைக்குரிய வகையில் பெண்கள் குறித்து கருத்து கூறிய சரவணன் திடீரென வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார் என்பது தெரிந்ததே. அதனை அடுத்து பிக்பாஸ் இறுதி நிகழ்ச்சியிலும் சரவணன் கலந்து கொள்ளவில்லை. இந்த நிலையில் தற்போது பிக்பாஸ் போட்டியாளர்களான சாண்டி மற்றும் கவின் ஆகிய இருவரும் சரவணனை நேரில் சந்தித்து பேசி உள்ளனர்
இந்த சந்திப்பின்போது சரவணன், சாண்டி, கவின் ஆகிய மூவரும் எடுத்து கொண்ட விதவிதமான புகைப்படங்கள் வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது
பிக்பாஸ் வீட்டில் இருக்கும்போது சரவணனுடன் மிகவும் நெருக்கமாக இருந்தவர்கள் சாண்டி மற்றும் கவின். மூவரும் வீட்டில் செம ஜாலியாக இருந்த நிலையில், சரவணன் திடீரென வெளியேற்றப்பட்ட போது இவர்கள் இருவரும் கதறி அழுத காட்சியை காண முடிந்தது. இந்த நிலையில் தற்போது சரவணனை விஆர் பாய்ஸ் சந்தித்து பேசி தங்களுடைய நட்பை புதுப்பித்துள்ளனர்