close
Choose your channels

என் மகள் போட்ட விதையில் வளர்ந்தது: சாண்டி மாஸ்டர் பெருமிதம்! 

Sunday, June 6, 2021 • தமிழ் Comments

பிரபல டான்ஸ் மாஸ்டர் மற்றும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான சாண்டி மாஸ்டருக்கு லாலா பாப்பா என்ற குழந்தை உள்ளது என்பதும் க்யூட்டான அந்த குழந்தையின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அவ்வப்போது சாண்டி மாஸ்டர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடுவார் என்பதும் தெரிந்தது. சமீபத்தில்கூட லாலா பாப்பாவின் பிறந்த நாள் குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சாண்டி மாஸ்டர் பதிவு செய்த நிலையில் அந்த புகைப்படங்கள் மிகப்பெரிய அளவில் வைரலானது.

இந்த நிலையில் சற்றுமுன் சாண்டி மாஸ்டர் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில் மொட்டை மாடி தோட்டத்தில் வளர்ந்த கீரைகளை பறித்து கூட்டு குழம்பு வைப்பது போன்ற காட்சிகள் உள்ளன. இதில் அவர் ’இன்று கீரை கூட்டு என்றும், மொட்டை மாடி தோட்டத்தில் வளர்ந்த கீரையை பறித்து கீரை பருப்பு கூட்டு வைத்திருக்கிறோம் என்றும் அதுமட்டுமின்றி கீரை தண்டு சூப் வைத்து உள்ளோம் என்றும் பதிவு செய்துள்ளார்.

மேலும் ’என் மகள் போட்ட விதை வளர்ந்து கீரை ஆகி உள்ளது’ என்றும் அவர் பெருமையுடன் தெரிவித்துள்ளார். இந்த வீடியோவில் லாலா பாப்பா கடந்த சில நாட்களுக்கு முன் மொட்டை மாடி தோட்டத்தில் விதை போட்டதும் அந்த விதைகள்தான் தற்போது கீரையாக வளர்ந்துள்ள காட்சிகளும் உள்ளன. இதனை அடுத்து இந்த வீடியோவுக்கு தற்போது லைக்ஸ்கள் குவிந்து வருகிறது.

Get Breaking News Alerts From IndiaGlitz