பிக்பாஸ் 4வது சீசனிலும் சாண்டி: வைரலாகும் புகைப்படம்!

பிக்பாஸ் தெலுங்கு நிகழ்ச்சி நேற்று தொடங்கப்பட்ட நிலையில் வரும் அக்டோபர் இரண்டாம் வாரத்தில் பிக்பாஸ் தமிழ் 4வது சீசன் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் வெளியான இரண்டு புரமோ வீடியோக்களும் வைரலானதை அடுத்து இந்த சீசனும் கடந்த மூன்று சீசன்கள் போல் வெற்றி அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று முன் தினம் கமல்ஹாசன் தனது டுவிட்டரில் வெளியிட்ட கொரோனா வைரஸ் விழிப்புணர்வுடன் கூடிய பிக்பாஸ் 4 புரமோ வீடியோ அனைவரையும் கவர்ந்த நிலையில் இந்த வீடியோவின் ஆரம்பத்திலேயே கமல் டான்ஸ் ஆடியபடியே வருவது அட்டகாசமாக இருந்தது.

இந்த நிலையில் இந்த வீடியோவில் கமலுக்கு டான்ஸ் இயக்குனராக இருந்தவர் கடந்த சீசனில் போட்டியாளராக இருந்தவரும், முன்னணி டான்ஸ் மாஸ்டருமான சாண்டி என தெரிய வந்துள்ளது. கமல்ஹாசனுக்கு டான்ஸ் கற்று கொடுத்த புகைப்படத்தை சாண்டி தனது இன்ஸ்டாமிராமில் பதிவு செய்துள்ளார்.

கமல் அவர்களுடன் மீண்டும் இணைந்து பணிபுரிந்ததில் தனக்கு மிகுந்த மகிழ்ச்சி என்றும், அவருடைய திறமையும் சினிமா அறிவும் அளவிட முடியாதது என்றும் சாண்டி குறிப்பிட்டுள்ளார். எனவே மூன்றாவது சீசனில் போட்டியாளராகவும் இந்த நான்காவது சீசனில் டான்ஸ் மாஸ்டராகவும் சாண்டியின் பங்களிப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

ஜூவாலா கட்டாவுக்கு மோதிரம் அணிவித்த விஷ்ணுவிஷால்: விரைவில் திருமணமா?

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஷ்ணு விஷால் கடந்த 2010ஆம் ஆண்டு ரஜினி நடராஜ் என்பவரை திருமணம் செய்த நிலையில் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக

தலைவன் தோனி இருக்க பயமேன்: சி.எஸ்.கே. அணியின் தலைமை செயல் அதிகாரி பேட்டி!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இரண்டு வீரர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு, சுரேஷ் ரெய்னா மற்றும் ஹர்பஜன்சிங் ஆகியோர் திடீரென அணியில் இருந்து விலகியது ஆகியவை

33 வயது மாப்பிள்ளையா? பிளேடால் கழுத்தை அறுத்து கல்லூரி மாணவி தற்கொலை!

தன்னை பெண் பார்க்க வந்த மாப்பிள்ளைக்கு 33 வயது என்பதால் அவரை பிடிக்கவில்லை என்று கூறிய கல்லூரி மாணவி ஒருவர் பிளேடால் கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம்

என்றும் இளமையாக இருக்க நம்ம ஊரு ஊட்டச்சத்து உணவு… தமிழிசை சௌந்திரராஜன் பரிந்துரை!!!

கடந்த மாதம் மன் கி பாத் நிகழ்ச்சிக்காக நாட்டு மக்களுடன் உரையாடிய பிரதமர் மோடி செப்டம்பர் மாதத்தை ஊட்டச்சத்து மாதமாக கடைப்பிடிக்க அழைப்பு விடுத்தார்.

பப்ஜி தடை எதிரொலி: 21 வயது ஐஐடி மாணவர் தற்கொலை!

கடந்த சில வாரங்களாகவே இந்திய மற்றும் சீன நாடுகள் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டு வருவதை அடுத்து சீனாவின் செயலிகளுக்கு இந்திய அரசு தடை விதித்து வருகிறது