close
Choose your channels

தீபாவளி ரேஸில் இருந்து பின்வாங்குகிறதா 'சங்கத்தமிழன்'?

Friday, August 30, 2019 • தமிழ் Comments

வரும் தீபாவளி அன்று விஜய்யின் 'பிகில்',  விஜய்சேதுபதியின் 'சங்கத்தமிழன்' மற்றும் கார்த்தியின் 'கைதி' ஆகிய மூன்று திரைப்படங்கள் வெளியாகும் என ஏற்கனவே அதிகாரபூர்வ அறிவிப்புகள் அந்தந்த படங்களின் தயாரிப்பு நிறுவனங்களிடம் இருந்து வெளிவந்தது என்பது தெரிந்ததே 

இந்த நிலையில் தீபாவளி ரேஸில் இருந்து விஜய்சேதுபதியின் 'சங்கத்தமிழன்' திரைப்படம் பின்வாங்கலாம் என்று கூறப்படுகிறது. தற்போது கிடைத்துள்ள செய்தியின்படி 'சங்கத் தமிழன்' திரைப்படம் தீபாவளிக்கு முன்கூட்டியே அதாவது அக்டோபர் முதல் வாரத்தில் வெளியாக வாய்ப்பு இருப்பதாகவும், இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது

 விஜய்யின் 'பிகில்' திரைப்படத்திற்கு பெரும்பாலான முக்கிய தியேட்டர்கள் ஏற்கனவே புக் ஆகி விட்டதால், சரியான தியேட்டர் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும் என்பதால் விஜய்சேதுபதி படம் முன்கூட்டியே ரிலீஸ் ஆகலாம் என கூறப்படுகிறது. இருப்பினும் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளிவரும் வரை பொறுமை காப்போம்

Get Breaking News Alerts From IndiaGlitz