close
Choose your channels

முதல்முறையாக குழந்தை படத்தை வெளியிட்ட அஜித்-விஜய் நாயகி!

Sunday, May 17, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தல அஜித் அறிமுகமானா ’அமராவதி’ என்ற திரைப்படத்தில் அறிமுகமானவர் நடிகை சங்கவி. இந்த படத்திற்கு பின்னர் அவர் விஜய்யுடன் ’ரசிகன்’ ’விஷ்ணு’ ’கோயம்புத்தூர் மாப்பிள்ளை’ உள்பட பல திரைப்படங்களில் நடித்தார். 90களில் கனவுக்கன்னியாக இருந்த சங்கவி, அதன்பின் சுமார் 100 படங்களில் குணசித்திர நடிகையாகவும் நடித்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த 2016 ஆம் ஆண்டு ஐடி பணிசெய்யும் வெங்கடேஷ் என்பவரைத் திருமணம் செய்துகொண்ட சங்கவிக்கு சமீபத்தில் குழந்தை பிறந்தது. 42 வயதில் குழந்தை பெற்ற சங்கவி தனது குழந்தையின் புகைப்படத்தை இதுநாள்வரை வெளியிடாமல் இருந்தார். இந்த நிலையில் சமீபத்தில் அன்னையர் தினத்தில் நடிகை சங்கவி தனது குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

நடிகை சங்கவி கடைசியாக கடந்த 2019ஆம் ஆண்டு வெளிவந்த ‘கொளஞ்சி’ என்ற படத்தில் சமுத்திரக்கனிக்கு ஜோடியாக நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.