close
Choose your channels

மச்சான் என்று பாக். வீரரை சொந்தம் கொண்டாடிய ரசிகர்கள்… வைரல் வீடியோ!

Wednesday, October 27, 2021 • தமிழ் Sport News Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஐசிசி நடத்தும் டி20 உலகக்கோப்பை தொடர் போட்டிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் இந்திய அணி கடந்த 24 ஆம் தேதி பாகிஸ்தான் அணியை எதிர்கொண்டு 10 விக்கெட் வித்தியாசத்தில் வரலாற்றுத் தோல்வியை தழுவியிருக்கிறது. முதல் போட்டியிலேயே இந்தியா படு தோல்வி அடைந்திருப்பது குறித்து ரசிகர்கள் வருத்தம் வெளியிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் எதிர் எதிர் அணிகளாக செயல்பட்டுவரும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான டி20 உலகக்கோப்பை போட்டியில் சில சுவாரசிய சம்பவங்களும் அரங்கேறின. இந்த நிகழ்வுகள் தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் பாக். வீரர் சோயிப் மாலிக் பவுண்டரி லைனுக்கு அருகில் பீல்டிங் செய்து கொண்டிருந்தார். அப்போது இந்தியா பேட்டிங்க் செய்து கொண்டிருந்தது. பவுண்டரி லைனுக்கு அருகில் சோயிப்பை பார்த்த ரசிகர்கள் திடீரென்று அவரை பார்த்து மச்சான் என்று உரிமையோடு அழைக்கத் துவங்கினர். இதை சோயிப் மாலிக் கவனித்ததும் குறிப்பிடத்தக்கது.

கடந்த 2010 ஆம் ஆண்டு பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வீரரான சோயிப் மாலிக்கை இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா திருமணம் செய்து கொண்டார். அந்த அடிப்படையில் மாப்பிள்ளையான சோயிப் மாலிக்கை இந்திய ரசிகர்கள் மச்சான் என்று உரிமையோடு அழைத்த வீடியோ தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவிற்கு சானியாவும் தனது டிவிட்டரில் ஈமோஜிகளை பதிவிட்டு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார்.

பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்த நிகழ்வைத் தவிர இன்னும் சில சுவாரசிய சம்பவங்கள் நடைபெற்றன. அதில் சிறப்பாக செயல்பட்ட பாக். வீரர் முகமது ரிஸ்வானை கோலி கட்டியணைத்து பாராட்டியது ரசிகர்களிடையே கடும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. அதேபோல பாக். இளம் வீரர்களுக்கு நம்முடைய தல தோனி சில ஆலோசனைகளை வழங்கியதும் பார்ப்பதற்கு நெகிழ்ச்சி அடைய வைத்திருக்கிறது.

(@realshoaibmalik) Malik Sb itna pyar MashaAllah??❤#PAKvIND #T20WorldCup pic.twitter.com/qvkqVaveJj

— m u b e e n (@Mubeen_says) October 25, 2021

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.