close
Choose your channels

விஜய்சேதுபதியின் 'எதிர்பார்த்த' டைட்டில் அறிவிப்பு

Tuesday, May 7, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய்சேதுபதி நடிப்பில் விஜய்சந்தர் இயக்கத்தில் விஜயா மூவீஸ் தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில வாரங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் இந்த படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட்லுக் இன்று மாலை 6 மணிக்கு அறிவிப்பதாக விஜய்சேதுபதி தனது சமூக வலைத்தள பக்கத்தில் தெரிவித்திருந்தார்

அந்த வகையில் சற்றுமுன் இந்த படத்திற்கு 'சங்கத்தமிழன்' என்ற டைட்டில் வைக்கப்பட்டு முறுக்கு மீசை விஜய்சேதுபதியின் ஃபர்ஸ்லுக்கும் அட்டகாசமான வெளியாகியுள்ளது. 'சங்கத்தமிழன்' டைட்டில் தான் இந்த படத்திற்கு முடிவு செய்யப்பட்டிருப்பதாக ஏற்கனவே படக்குழுவினர்களிடம் இருந்து கசிந்த தகவலை நாம் ஏற்கனவே கூறியிருந்தோம்

விஜய்சேதுபதிக்கு ஜோடியாக ராஷிகண்ணா நடித்து வரும் இந்த படத்தில் ஸ்ரீமான் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். விவேக்-மெர்வின் இசையில் வேல்ராஜ் ஒளிப்பதிவில் பிரவீண் கே.எல். படத்தொகுப்ப்பில் அனல் அரசு சண்டை பயிற்சியில் இந்த படம் உருவாகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.