ஏன்டா என்னை கூறுபோட்டு வித்துகிட்டு இருக்க: 'ஏஜண்ட் கண்ணாயிரம்' டீசர்

  • IndiaGlitz, [Friday,January 21 2022]

தமிழ் திரையுலகை பொறுத்தவரை காமெடி நடிகர்கள் துப்பறியும் நிபுணர் வேடத்தில் நடித்த படங்கள் நல்ல ஹிட்டாகி உள்ளன என்பது தெரிந்ததே. நாகேஷ் முதல் வடிவேலு வரை பல காமெடி நடிகர்கள் துப்பறியும் நிபுணர் வேடத்தில் நடித்துள்ள நிலையில் தற்போது காமெடி நடிகரில் இருந்து ஹீரோவாக புரமோஷன் ஆன சந்தானம் துப்பறியும் நிபுணர் வேடத்தில் நடித்துள்ள திரைப்படம் தான் ’ஏஜென்ட் கண்ணாயிரம்’.

கிராமப்புறத்தில் சுத்தப்பட்டு பதினெட்டு பட்டிக்கும் துப்பறியும் நிபுணராக இருக்கும் சந்தானம் சந்திக்கும் பிரச்சனைகள் காமெடியாக இந்த படத்தில் கூறப்பட்டுள்ளன. இந்த படம் சந்தானத்தின் புதிய முயற்சியாக பார்க்கப்படுகிறது.

சந்தானம், ரியா சுமன், ஸ்ருதி ஹரிஹரன், புகழ், முனிஸ்காந்த், ரெடின் கிங்ஸ்லி உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை மனோஜ் பீதா இயக்கியுள்ளார். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவில், யுவன் சங்கர் ராஜா இசையில், அஜய் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படம் விரைவில் வெளியாக உள்ள நிலையில் இந்த படத்தின் டீஸர் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

பிக்பாஸ் வீட்டில் கணவரை பற்றி பிரியங்கா ஏன் பேசவில்லை: இதுதான் காரணமா?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவரான பிரியங்கா  இரண்டாம் இடம் பெற்றார் என்பதும், ராஜூவை விட அவருக்கு அதிக பிரபலம் இருந்தாலும் தாமரை, நிரூப் உள்பட ஒருசிலருடன்

ஆஸ்கர் தகுதி பட்டியலில் கீர்த்தி சுரேஷ் திரைப்படம்!  

மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் உடன் கீர்த்தி சுரேஷ் நடித்த திரைப்படம் ஆஸ்கர் தகுதிப் பட்டியலில் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சாய்னா நேவல் குறித்து சர்ச்சை டுவிட்: சித்தார்த் மீது சென்னை போலீஸ் அதிரடி நடவடிக்கை

கடந்த சில நாட்களுக்கு முன்னர் பிரபல பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவல் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் டுவிட் பதிவு செய்த சித்தார்த் மீது சென்னை போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது

பாராஒலிம்பிக் தங்க மங்கைக்கு ஆனந்த் மஹேந்திரா வழங்கிய நெகிழ்ச்சி பரிசு!

விளையாட்டுத் துறையில் சாதனை படைக்கும் இந்திய வீரர்களுக்கு

கொரோனா நேரத்தில் YouTube பார்த்து விமானம் தயாரித்த இந்தியக் குடும்பம்!

இங்கிலாந்தில் வசித்துவரும் இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட இந்தியர் ஒருவர் கொரோனா நேரத்தைப் பயனுள்ளதாக