close
Choose your channels

சந்தானம் நடிக்கும் அடுத்த படத்தின் டைட்டில் அறிவிப்பு

Friday, October 28, 2016 • தமிழ் Comments

கோலிவுட்டின் முன்னணி காமெடி நடிகராக இருந்த சந்தானம் தற்போது ஹீரோவாக புரமோஷன் பெற்று வெற்றி படங்களை கொடுத்து வரும் நிலையில் அவர் நடித்து முடித்துள்ள 'சர்வர் சுந்தரம்' விரைவில் வெளியாகவுள்ளது.
இந்நிலையில் கே.எஸ்.மணிகண்டன் இயக்கத்தில் சந்தானம் ஒரு படத்தில் ஹீரோவாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என்பதை சமீபத்தில் பார்த்தோம். இந்த படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட்லுக் தற்போது இணையதளத்தில் வெளியாகியுள்ளது.
இந்த படத்திற்கு 'ஓடி ஓடி உழைக்கணும்' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. எம்.ஜி.ஆர். நடித்த 'நல்ல நேரம்' படத்தின் பாடலின் வரிகளே இந்த படத்தின் டைட்டிலாக தேர்வு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தில் சந்தானத்துக்கு ஜோடியாக 'அனேகன்' நாயகி அம்ரியா தஸ்தூர் நடிக்கவுள்ளார். ஜிப்ரான் இந்த படத்திற்கு இசையமைக்கவுள்ளார்.

Get Breaking News Alerts From IndiaGlitz