close
Choose your channels

சந்தானம் அடுத்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

Friday, July 12, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

காமெடி நடிகராக இருந்தபோது வருடத்திற்கு பத்து படங்களுக்கும் மேல் நடித்து கொண்டிருந்த சந்தானம், ஹீரோவான பின்னர் வருடத்திற்கு ஒரு படம் வெளிவருவதே அரிதாக உள்ளது. 2017ஆம் ஆண்டு 'சக்க போடு போடு ராஜா' படத்திற்கு பின்னர் 2019ஆம் ஆண்டு தான் அவருடைய அடுத்த படமான 'தில்லுக்கு துட்டு 2' வெளியானது. இந்த நிலையில் அவரது நடிப்பில் உருவாகியுள்ள அடுத்த படமான 'A1' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் படப்பிடிப்பு தொடங்கி விறுவிறுப்பாக நடந்த நிலையில், இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் கடந்த மார்ச் மாதம் வெளியானது. தற்போது இந்த படத்தின் அனைத்து பணிகளும் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக இருக்கும் நிலையில் ஜூலை 26ஆம் தேதி இந்த படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு, ரிலீஸ் தேதியுடன் கூடிய புதிய போஸ்டர் ஒன்றும் வெளியாகியுள்ளது.

சந்தானம், தாரா அலிஷா, மொட்ட ராஜேந்திரன், சாய்குமார், எம்.எஸ்.பாஸ்கர், உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை ஜான்சன் இயக்கியுள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையில் கோபி ஜெகதீஸ்வரன் ஒளிப்பதிவில் லியோ ஜான்பால் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை சர்க்கிள் பாக்ஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.