close
Choose your channels

சந்தானம் நடித்த 'A1' ரிலீஸ் குறித்த தகவல்

Friday, June 21, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் சந்தானம் ஹீரோவாக நடித்த 'தில்லுக்கு துட்டு 2' திரைப்படம் கடந்த பிப்ரவரி மாதம் வெளியாகி நல்ல வசூலை பெற்ற நிலையில் அவரது நடிப்பில் உருவான அடுத்த படமான ''A1'' திரைப்படத்தின் ரிலீஸ் குறித்த தகவல் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

'A1' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது இறுதிக்கட்ட தொழில்நுட்ப பணிகள் நடந்து வரும் நிலையில் இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை '18 ரீல்ஸ்' நிறுவனர் எஸ்பி செளத்ரி பெற்றுள்ளார். இதனையடுத்து இந்த படம் வரும் ஜூலையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனம் தான் சந்தானம் நடித்து வரும் இன்னொரு படமான 'டகால்டி' என்ற படத்தை தயாரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சந்தானம், தாரா அலிஷா பெர்ரி, மொட்ட ராஜேந்திரன், சாய்குமார், எம்.எஸ்.பாஸ்கர், உள்பட பலர் நடித்துள்ள ''A1'' திரைப்படத்தை ஜான்சன் இயக்கியுள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையில் கோபி ஜெகதீஸ்வரன் ஒளிப்பதிவில் லியோ ஜான்பால் படத்தொகுப்பில் உருவாகிவரும் இந்த படம் ஒரு ரொமான்ஸ் காமெடி படம் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.