close
Choose your channels
evp_raaga
kappan_us

லோக்கல் பையனுக்கும் அக்ரஹாரத்து பெண்ணுக்கும் காதல்: 'A 1' டீசர்

Tuesday, July 16, 2019 • தமிழ் Comments

நடிகர் சந்தானம் ஹீரோவாக நடித்த அடுத்த திரைப்படம் 'A 1'. இந்த திரைப்படத்தின் டீசர் சற்று முன் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்று வருகிறது

சன் டிவியின் விளம்பர அறிவிப்பை போல் உருவாக்கப்பட்டுள்ள இந்த படத்தின் டீசரில் இருந்து லோக்கல் பையனுக்கும் அக்ரஹாரத்து பெண்ணுக்கும் ஏற்படும் காதல், இந்த காதலால்  இருவீட்டார்கள் தரும் பிரச்சனைதான் கதையாக இருக்கும் என கணிக்கப்படுகிறது. காதலுக்காக அக்ரஹாரத்து பெண் ஆம்லெட் சாப்பிடுவது, அதே காதலுக்காக தன்னுடைய வீட்டை பகைத்து கொள்வது என்ற கதையில் சில ஆக்சன் காட்சிகளும் உள்ளன. நடிகர் சாய்குமார் போலீஸ் கேரக்டரில் ஆக்சன் நடிப்பை தந்துள்ளார்

வழக்கம்போல் சந்தானம் பஞ்ச் டயலாக்குடன் கூடிய காமெடி நடிப்பை தந்துள்ளார். 'கறிக்கொழம்புல எலும்பு, உன் கதையே வேணாம் கிளம்பு' என்ற வசனம் ஒரு சான்று. 

காதல், காமெடி, ஆக்சன் என ஒரு ஜனரஞ்சக கமர்சியல் படமாக உருவாகியுள்ள இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். சந்தானம், தாரா அலிஷா, மொட்ட ராஜேந்திரன், சாய்குமார், எம்.எஸ்.பாஸ்கர், உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை ஜான்சன் இயக்கியுள்ளார். கோபி ஜெகதீஸ்வரன் ஒளிப்பதிவில் லியோ ஜான்பால் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை சர்க்கிள் பாக்ஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது 

Get Breaking News Alerts From IndiaGlitz