close
Choose your channels

சந்தானம் நடித்த 'ஏஜண்ட் கண்ணாயிரம்' ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Wednesday, October 26, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் சந்தானம் நடித்த ‘ஏஜண்ட் கண்ணாயிரம்’ என்ற திரைப்படம் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக இருக்கும் நிலையில் தற்போது அதிகாரபூர்வ ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது

நடிகர் சந்தானம் நடித்த ‘ஏஜண்ட் கண்ணாயிரம்’ என்ற படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது என்பதும் இந்த படத்தின் இரண்டு நிமிட மேக்கிங் வீடியோ சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பதும் தெரிந்ததே

இந்நிலையில் இந்த படம் நவம்பர் மாதம் ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது நவம்பர் 25 ஆம் தேதி ரிலீஸ் செய்யப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து இந்த படத்தின் புரமோஷன் பணிகளையும் தொடங்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

சந்தானம், ரியா சுமன், ஸ்ருதி ஹரிஹரன், புகழ், முனிஸ்காந்த் உள்பட பலர் நடித்து வரும் இந்த திரைபடத்தை மனோஜ் பிதா என்பவர் இயக்கியுள்ளார். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவில், யுவன் சங்கர் ராஜா இசையில் இந்த படம் உருவாகியுள்ளது.

இந்த நிலையில் சந்தானம் ‘கிக்’ என்ற படத்திலும் நடித்து வருகிறார். இந்த படத்தில் சந்தானம், தன்யா ஹோப், தம்பி ராமையா, பிரம்மானந்தம், செந்தில், கோவை சரளா, மன்சூர் அலிகான், மனோபாலா, மொட்டை ராஜேந்திரன், ராகினி திவேதி உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இந்த படத்தை பிரபல கன்னட இயக்குனர் பிரசாந்த் ராஜ் இயக்கி வருகிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.