close
Choose your channels

சந்தானம் நடித்த 'டகால்டி' ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Friday, January 10, 2020 • தமிழ் Comments

சந்தானம் நடித்த ’தில்லுக்கு துட்டு’ மற்றும் ஏ1 ஆகிய இரண்டு படங்கள் அவருக்கு கடந்த ஆண்டு வெற்றிப் படங்களாக அமைந்த நிலையில், இந்த ஆண்டு அவர் நடித்த மூன்று படங்கள் வெளியாக வாய்ப்பு உள்ளது. அவற்றில் ‘டகால்டி’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி சற்றுமுன் அதிகாரபூர்வமாக வெளியாகியுள்ளது. 

‘டகால்டி’ படத்தில் இடம்பெற்ற இரண்டாவது சிங்கிள் பாடல் சற்றுமுன் வெளியாகியுள்ளது. இசையமைப்பாளர் விஜய் நரேன் கம்போஸ் செய்த இந்த பாடலை பிரபல இசையமைப்பாளர்களான சந்தோஷ் நாராயணன் மற்றும் கோவிந்த் வசந்தா ஆகியோர் இணைந்து பாடியுள்ளனர். இந்த நிலையில் இந்த படம் வரும் 31ஆம் தேதி வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டு ரிலீஸ் தேதியுடன் கூடிய புதிய போஸ்டரும் வெளியாகியுள்ளது.

முதல்முறையாக சந்தானம் இரண்டு வித்தியாசமான வேடங்களில் இந்த படத்தில் நடித்துள்ளார். அவற்றில் ஒன்று மும்பையில் வாழும் தமிழ்ப்பையன் வேடம். சந்தானம் ஜோடியாக பெங்காலி நடிகை ரித்திகாசென் நடிக்கும் இந்த படத்தில் யோகி பாபு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். விஜய் ஆனந்த் இயக்கியுள்ள இந்த படம் தீபக்குமார் ஒளிப்பதிவில் சுரேஷ் படத்தொகுப்பில் உருவாகி வருகிறது.

Get Breaking News Alerts From IndiaGlitz