சந்தானம் நடிக்கும் 'நெக்ஸ்ட் லெவல்'.. ரிலீஸ் தகவலுடன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்..!


Send us your feedback to audioarticles@vaarta.com


சந்தானம் நடித்த ’தில்லுக்கு துட்டு’ என்ற திரைப்படம் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியானது. அதன் இரண்டாம் பாகமாக ’தில்லுக்கு துட்டு 2’ என்ற திரைப்படம் 2019 ஆம் ஆண்டு வெளியானது. இதனைத் தொடர்ந்து, ’டிடி ரிட்டர்ன்ஸ்’ என்ற பெயரில் அடுத்த பாகமாக கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியானது.
இப்போது, இந்த படத்தின் அடுத்த பாகம் ’டிடி நெக்ஸ்ட் லெவல்’ என்ற பெயரில் தயாராகி வருகிறது. இந்த படத்தில் சந்தானம் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவருடன் ஆர்யா, கௌதம் மேனன், செல்வராகவன் உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர்.
இந்த நிலையில், நேற்று ’நெக்ஸ்ட் லெவல்’ என்ற தலைப்பில் ஒரு போஸ்டர் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. சில மணி நேரங்களுக்கு முன், இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. ’டிடி: நெக்ஸ்ட் லெவல்’ என்ற உருவாகி வரும் இந்த படம் வரும் மே மாதத்தில் திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தின் நாயகியாக கீர்த்திகா நடிக்கிறார். கஸ்தூரி, யாஷிகா ஆனந்த், மொட்ட ராஜேந்திரன் உள்ளிட்ட பலரும் இப்படத்தில் நடிக்கின்றனர். தற்போது, இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Double the Humour 😂
— Santhanam (@iamsanthanam) January 21, 2025
Double the Horror 😱
Here’s the First Look of my next #DDNextLevel - Devil's Double
A film by @iampremanand
Produced by @TSPoffl @NiharikaEnt
May Release! #DhillukuDhuddu@arya_offl @menongautham @selvaraghavan @geethika0001 @KasthuriShankar… pic.twitter.com/GAtJFsSOTB
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout

-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com