நெல்சனா யார்றா அவன்? அப்ப ஜெயிலர் 2 கட் ஆ? 'டிடி நெக்ஸ்ட் லெவல்' டிரைலர்..


Send us your feedback to audioarticles@vaarta.com


நடிகர் சந்தானம் நடித்த ’டிவிடி நெக்ஸ்ட் லெவல்’ என்ற திரைப்படம், மே 16ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில், இந்த படத்தின் டிரைலர் சற்றுமுன் வெளியாகி, இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
சுமார் மூன்று நிமிடங்களுக்கும் அதிகமாக ஓடும் இந்த ட்ரைலரில், முழுக்க முழுக்க நகைச்சுவை மற்றும் பேயின் திகில் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. ’நாளைக்கு நாங்க ஒரு ஸ்பெஷல் ஷோ போடுறோம், அதுக்கு நீங்க வந்தீங்கன்னா படத்திற்கு ப்ரமோஷன் ஆக இருக்கும்’ என்று சந்தானத்திற்கு அழைப்பு வருகிறது.
அந்த படத்தை பார்க்க செல்லும் போது, அவர் திடீரென கடத்தப்படுகிறார். அங்கிருந்து ஒரு கப்பலுக்கு அவர் மாற்றப்படும் நிலையில், அந்த கப்பலில் உள்ள அமானுஷ்ய சக்திகள், சந்தானத்தையும் அவரது குழுவினரையும் என்ன செய்தது என்பதுதான் இந்த படத்தின் திகிலான கதை.
திகிலான மற்றும் நகைச்சுவையான கதை அம்சம் என தெரிகிறது. சந்தானம் ஒவ்வொரு பிரேமிலும் தனது அதிரடி ஜோக்கை வெளிப்படுத்தி, சிரிக்க வைக்கிறார் என்பதும், இந்த படம் நிச்சயம் அவருக்கு இன்னொரு வெற்றி படமாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.
அவருக்கு இணையாக மொட்ட ராஜேந்திரன், செல்வராஜ், செல்வராஜ் கௌதம் மேனன், நிலவு ரவி உள்ளிட்டோர் காமெடியாக நடித்துள்ளனர். மொத்தத்தில், இந்த படம் ட்ரைலர் ரிலீஸ் பிறகு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்த ட்ரெய்லரில் ரெடின் கிங்ஸ்லி இடம் சந்தானம் ’நீ நெல்சன் சொல்லிக் கொடுத்த ஒரே ஒரு மாடுலேஷனை வைத்து எல்லா படத்திலும் பயன்படுத்தாதே’ என்று சொல்ல, அதற்கு ரெடின் ’நெல்சனா? யார்ரா அவன்? என்று கேட்கிறார். உடனே பக்கத்தில் இருக்கும் மொட்டை ராஜேந்திரன் ’அய்யய்யோ, அப்ப ‘ஜெயிலர் 2’ படத்தில் நீ கட்டா என்று கேட்கும் காட்சிகள் காமெடியாக உள்ளன.
அதேபோல் கௌதம் மேனன் யாஷிகாவே காதலிக்கும் காட்சி சூர்யாவின் பட பாடல் பின்னணியில் ஒலிக்கும் காட்சியும் காமெடி ஆக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments