அதிவேக 100 மில்லியன் பார்வை.. ZEE5 தளத்தில் “டிடி ரிட்டர்ன்ஸ்”  படம் சாதனை !

  • IndiaGlitz, [Monday,September 11 2023]

ZEE5 தளத்தில் அதிவேக 100 மில்லியன் பார்வை நிமிடங்கள் கடந்து, “டிடி ரிட்டர்ன்ஸ்” படம் சாதனை செய்துள்ளது.

இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமாக ரசிகர்களால் கொண்டாடப்படும் Zee5 தளத்தில் சமீபத்தில் வெளியான “டிடி ரிட்டர்ன்ஸ்” படம் அதிவேகத்தில் 100 மில்லியன் பார்வை நிமிடங்கள் கடந்து, சாதனை படைத்துள்ளது.

ஆர்.கே என்டர்டெயின்மென்ட்டின் சார்பில் சி ரமேஷ் குமார் தயாரிப்பில், இயக்குனர் எஸ். பிரேம் ஆனந்த் இயக்கத்தில் நடிகர் சந்தானம் நடிப்பில் கலக்கலான காமெடி படமாக வெளிவந்த திரைப்படம் “டிடி ரிட்டர்ன்ஸ்”. திரையரங்குகளில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற இப்படம், சமீபத்தில் ZEE5 தளத்தில் வெளியானது.

நடிகர் சந்தானம், சுரபி, முதன்மை பாத்திரங்களில் நடிக்க, மொட்டை ராஜேந்திரன், ரெடின் கிங்ஸ்லி, பெப்ஸி விஜயன் ஆகியோருடன் மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர்.

நடிகர் சந்தானம் நடிப்பில் ஹாரர் காமெடி ஜானரில் அனைவரும் ரசிக்கும்படியான படமாக இப்படம் உருவாக்கப்பட்டிருந்தது. இப்படத்திற்கு ஒளிப்பதிவு தீபக் குமார் மற்றும் படத்தொகுப்பு என் பி ஶ்ரீகாந்த் கையாண்டுள்ளனர். இசையமைப்பாளர் ஆஃப்ரோ இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.

வெகு நாட்களுக்கு ரசிகர்கள் வயிறு வலிக்க சிரித்து மகிழும் படி சரவெடி காமெடியுடன் கலக்கலான நகைச்சுவையுடன் இப்படம் உருவாகியிருந்தது.

திரையரங்குகளில் பிளாக்பஸ்டர் வெற்றியைப் பெற்ற இப்படம் தற்போது ZEE5 தளத்திலும் பல சாதனைகள் படைத்து வருகிறது. இதுவரை ZEE5 தளத்தில் வெளியான படங்களில் அதி வேகத்தில் 100 மில்லியன் பார்வை நிமிடங்கள் கடந்து இப்படம் சாதனை படைத்துள்ளது. குடும்ப ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ள இப்படம் மேலும் பல சாதனைகள் படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

“டிடி ரிட்டர்ன்ஸ்” 100 மில்லியன் பார்வை நிமிடங்களைக் கடந்ததை கொண்டாடும் விதமாக, கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள மெரினா மாலில் “டிடி ரிட்டர்ன்ஸ்” படத்தில் வரும் இடங்களின் மீட்டுருவாக்கம் செய்து பிரத்தியேகமான ஸ்கேரி ரூம் ZEE5 நிறுவனத்தால் அமைக்கப்பட்டுள்ளது. இதில் பங்கேற்கும் பொது மக்களுக்கு 100 ரூபாய் தள்ளுபடி வழங்கப்படுகிறது. மெரினா மால் வரும் பொதுமக்கள் குடும்பத்துடன், புதுமையான இந்த ஸ்கேரி ரூமை, பார்வையிட்டுக் கொண்டாடி வருகிறார்கள்

எண்ணற்ற வெற்றி படைப்புகளை கொண்டிருக்கும் ZEE5 தளம் புத்தம் புதிய திரைப்படங்கள் மற்றும் புதிய வெப் சீரிஸ்களை ரசிகர்களுக்கு விருந்தளித்து வருகிறது. ZEE5 உடன் இணைந்திருங்கள் உங்கள் பொழுதுபோக்கை உற்சாகமாகக் கொண்டாடுங்கள்.

More News

சென்னை இசை நிகழ்ச்சியில் ஏற்பட்ட குழப்பம்: ஏ.ஆர் ரஹ்மான் முக்கிய அறிவிப்பு..!

சென்னையில் நேற்று இசைப்புயல் ஏஆர் ரகுமானின் இசை நிகழ்ச்சி நடந்த நிலையில் இந்த இசை நிகழ்ச்சிக்கு அளவுக்கு அதிகமாக டிக்கெட் வழங்கப்பட்டிருந்ததால் பொதுமக்கள் சிரமப்பட்டனர். 5000  ரூபாய் வரை

முன்னாள் முதலமைச்சருக்கு சிறை.. பட்டாசு வெடித்து கொண்டாடிய நடிகை..!

ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுக்கு சிறை தண்டனை என நீதிமன்றம் அறிவித்துள்ள நிலையில்  பிரபல நடிகை தனது வீட்டின் முன் பட்டாசு வெடித்து கொண்டாடியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி

ஆங்கிலோ இந்திய பெண்ணாக யோகிபாபு.. 'மிஸ் மேகி' படத்தின் முக்கிய அறிவிப்பு..!

தமிழ் திரை உலகின் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவரான யோகி பாபு சில படங்களில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார் என்பதும் அவர் ஹீரோவாக நடித்து வரும் படங்களும் நல்ல வெற்றியை பெற்று வருகிறது

வதந்திக்கு முற்றுப்புள்ளி.. அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது 'தலைவர் 171'..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், 'தலைவர் 171' திரைப்படம் உருவாக இருப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியான நிலையில் சற்றுமுன் இந்த படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு

தொடர்ச்சியாக வெளியாகும் மாஸ் நடிகர்களின் பெரிய பட்ஜெட் படங்கள்.. வேற லெவலுக்கு செல்லும் தமிழ் சினிமா..!

தமிழ் சினிமாவுக்கு தற்போது பொற்காலம் என்றே கூறலாம். கமல்ஹாசனின் 'விக்ரம்' 300 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்தது என்றால் ரஜினிகாந்தின் 'ஜெயிலர்' 600 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது.