close
Choose your channels

லவ்வுக்காக அமெரிக்கா போக முடியாது, ஆனால் 2020க்கு போக முடியும்: 'டிக்கிலோனா' டிரைலர்

Saturday, August 28, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் சந்தானம் நடிப்பில் கார்த்திக் யோகி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘டிக்கிலோனா’. இந்த படம் விரைவில் வெளியாக இருக்கும் நிலையில் சற்று முன்னர் இந்த படத்தின் 2ஆவது ட்ரெய்லர் வெளியாகியுள்ளது

சந்தானம் மூன்று முறையாக மூன்று வேடங்களில் நடித்துள்ள படம் முழுக்க முழுக்க காமெடி கதையம்சம் கொண்டது என்பது டிரெய்லரில் இருந்து தெரியவருகிறது. சந்தானம் ஜோடியாக அனைகா மற்றும் ஷிரின் காஞ்ச்வாலா நடித்துள்ள இந்த திரைப்படத்தில் மொட்ட ராஜேந்திரன், யோகிபாபு, முனிஸ்காந்த், சித்ரா லட்சுமணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்

யுவன் சங்கர் ராஜாவின் பின்னணி இசை குறிப்பாக மைக்கேல் மதனகாமராஜன் படத்தில் இடம்பெற்ற ’பேர் வச்சாலும் வைக்காம போனாலும் மல்லி..’ என்ற பாடல் டிரைலரில் பார்ப்பதற்கு சூப்பராக உள்ளது. மேலும் இந்த படத்தில் ’அவனவன் காதலுக்காக அமெரிக்கா போவான், என்னால அமெரிக்கா எல்லாம் போக முடியாது, ஆனால் 2020க்கு போக முடியும் என்று கூறுவதன் மூலம் இந்த படம் ஒரு டைம் டிராவல் படம் என்பது உறுதியாகிறது. கேஜேஆர் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.