close
Choose your channels

சந்தானம் நடிக்கும் 'டிக்கிலோனா' படத்தின் முக்கிய அறிவிப்பு

Wednesday, May 27, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சந்தானம் நடித்த ’டகால்டி’ திரைப்படம் சமீபத்தில் வெளியான நிலையில் தற்போது அவர் ’டிக்கிலோனா’ ’பிஸ்கோத்’ ஆகிய இரண்டு படங்களில் நடித்து வருகிறார். இந்த படங்களின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடைந்து விட்டதாகவும் கொரோனா லாக்டவுன் முடிந்தவுடன் இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்படுகிறது

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக தமிழ் திரைப்படங்களின் புரமோஷன்கள் வெளியாக தொடங்கிய நிலையில் தற்போது ’டிக்கிலோனா’ படத்தின் புரமோஷனும் இன்று முதல் தொடங்க உள்ளதாக நடிகர் சந்தானம் தனது சமூக வலைத்தளத்தில் அறிவித்துள்ளார்

இந்த படத்தில் சந்தானம் மூன்று வேடங்களில் நடிக்க உள்ளார் என்ற செய்தி ஏற்கனவே தெரிந்ததே. இதனை அடுத்து இந்த படத்தில் சந்தானத்தின் மூன்று கெட்டப்புகளும் மூன்று நாட்கள் தொடர்ச்சியாக வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். இதனையடுத்து முதல் கெட்டப் இன்று மாலை 5 மணிக்கு வெளியாக உள்ளது. நாளை மற்றும் நாளை மறுநாள் அடுத்த கெட்டப்புகள் வெளியாகவுள்ளது

சந்தானம் ஜோடியாக அனஹா நடித்துள்ள இந்த படத்தில் பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்பஜன்சிங் முக்கிய வேடம் ஒன்றில் நடித்துள்ளார் என்பதும் இதுதான் அவர் நடிக்கும் முதல் படம் என்பதும் குறிப்பிடத்தக்கது. கார்த்திக் யோகி இயக்கி வரும் இந்த படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.