'வடக்குப்பட்டி ராமசாமி' ரிலீஸில் திடீர் மாற்றம்.. சந்தானம் தான் காரணமா?

  • IndiaGlitz, [Monday,January 22 2024]

சந்தானம் நடித்த ’வடக்குப்பட்டி ராமசாமி’ என்ற திரைப்படம் இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் திடீரென அதில் ஒரு மாற்றம் ஏற்பட்டுள்ளது.

சந்தானம் நடித்த ’வடக்குப்பட்டி ராமசாமி’ திரைப்படத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும் அந்த நிறுவனத்தின் சார்பில் விளம்பரமும் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் திடீரென தற்போது ’வடக்குப்பட்டி ராமசாமி ’படத்தின் விளம்பரத்தில் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் பெயர் இல்லை. அதற்கு பதிலாக ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் இந்த படத்தை வெளியிட இருப்பதாக குறிப்பிட்டுள்ளது.

சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் வெளியான நிலையில் அதில் சந்தானம் பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய வசனம் பேசியதாகவும் அதனால்தான் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் இந்த படத்தில் இருந்து வெளியேறி இருப்பதாகவும் கூறப்படுகிறது.

சந்தானம், மேகா ஆகாஷ், நிழல்கள் ரவி, எம்.எஸ், பாஸ்கர், மொட்டை ராஜேந்திரன், ஜான் விஜய், ரவி மரியா உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை கார்த்திக் யோகி இயக்கியுள்ளார். சீன் ரோல்டன் இசையில் தீபக் ஒளிப்பதிவில் சிவ ஆனந்தீஸ்வரன் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது.

More News

கர்ப்பமான அமலாபாலை தண்ணீரில் மிதக்க விட்ட கணவர்.. வைரலாகும் நீச்சல் குள வீடியோ..!

நடிகை அமலாபால் சமீபத்தில் தான் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்த நிலையில் நீச்சல் குளத்தில் அவரை தண்ணீரில் மிதக்க விட்டு அவரது கணவர் ரொமான்ஸ் செய்யும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரல் ஆகி வருகிறது.

டி ராஜேந்தர் வீட்டிற்கு வந்த புதுவரவு: குடும்பத்தினர் மகிழ்ச்சி..!

டி ராஜேந்தர் மருமகள் ஆண் குழந்தை பெற்றதை அடுத்து தங்கள் குடும்பத்திற்கு வந்த புது வரவை குடும்பத்தினர் மகிழ்ச்சியுடன் வரவேற்று உள்ளனர்.

அவர் கூறிய கருத்தில் எனக்கு விமர்சனம் உள்ளது: அயோத்தி சென்ற ரஜினி குறித்து ரஞ்சித்..!

அயோத்தி ராமர் கோவிலுக்கு சென்றது ரஜினியின் விருப்பம் என்றாலும் அவர் சொன்ன கருத்தில் எனக்கு விமர்சனம் உள்ளது என்று இயக்குனர் பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

பகத் பாசில் - வடிவேலு படத்தின் மாஸ் டைட்டில்.. செம்ம போஸ்டர் வைரல்..!

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான 'மாமன்னன்' திரைப்படத்தில் உதயநிதி ஸ்டாலின் உடன் வடிவேலு மற்றும் பகத் பாசில் இணைந்து நடித்தனர் என்பது தெரிந்ததே.

பிரதமர் மோடி அவர்களுக்கு ஒரு சல்யூட்.. விஷாலின் இந்த பதிவு எதற்கு?

இன்று அயோத்தியில் ராமர் கோயில் திறக்கப்பட்டதை அடுத்து பிரதமருக்கு ஒரு சல்யூட் என நடிகர் விஷால் தனது சமூக வலைத்தளத்தில்  பெருமையுடன் புகழ்ந்துள்ளார்.