ஓடிடியில் சந்தானம் நடித்த அடுத்த படம்: ரிலீஸ் தேதி அறிவிப்பு

  • IndiaGlitz, [Wednesday,August 18 2021]

நடிகர் சந்தானம் நடித்த அடுத்த திரைப்படம் ஓடிடியில் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

நடிகர் சந்தானம் முதன்முறையாக மூன்று வேடங்களில் நடித்த திரைப்படம் ’டிக்கிலோனா’. இந்த படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிந்து கடந்த மார்ச் மாதமே ரிலீசுக்கு தயாராகி சென்சார் சான்றிதழ் பெற்று விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் மார்ச் மாதத்திலிருந்து ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதை அடுத்து இந்த படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப் போய்க் கொண்டே வந்தது. இந்த நிலையில் தற்போது இந்த திரைப்படம் ஓடிடியில் ரிலீஸ் ஆக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் செப்டம்பர் மாதம் 10ஆம்தேதி ஜீ5 ஓடிடியில் இந்த படம் ரிலீஸாகும் என இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான கேஜேஆர் ஸ்டூடியோஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 

மூன்று வேடங்களில் சந்தானம் நடித்துள்ள இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக அனைகா, ஷிரின்  ஆகியோர் நடித்துள்ளனர். மேலும் இந்த படத்தில் மொட்ட ராஜேந்திரன், முனீஸ்காந்த், ஆனந்தராஜ் உள்பட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா ஆகிய இருவரும் இணைந்து இசையமைத்துள்ளனர். இந்த படத்தில் ’பேர் வச்சாலும் வைக்காம’ என்ற கமல்ஹாசனின் ‘மைக்கேல் மதனகாமராஜன்’ படத்தின் பாடல் ரீமிக்ஸ் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

ஆடை மாற்றுவதை நேரலையில் ஒளிபரப்பிய இளம்பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்: வைரல் வீடியோ

ஆடை மாற்றுவதை நேரலையில் ஒளிபரப்ப துணிந்த இளம்பெண் ஒருவருக்கு நேர்ந்த விபரீதம் குறித்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது

லைகா நிறுவனத்திற்கு ரூ.5 லட்சம் அபராதம்: நீதிமன்றத்தின் அதிரடி குறித்து பிரபல நடிகர் டுவிட்!

தமிழ் திரை உலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான லைகா நிறுவனத்திற்கு நீதிமன்றம் ரூபாய் 5 லட்சம் அபராதம் விதித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

மனைவியை 8 முறை கருக்கலைப்பு செய்ய கட்டாயப்படுத்திய கணவர்: அதிர்ச்சி காரணம்!

தனது மனைவி ஆண் குழந்தை பெற்றுத்தர வேண்டும் என்பதற்காக 8 முறை கருக்கலைப்பு செய்ய கட்டாயப்படுத்தியதாக பெண் ஒருவர் காவல்நிலையத்தில் புகார் அளித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சசிதரூர் மனைவி சுனந்தா புஷ்கர் தற்கொலை வழக்கு: டெல்லி நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பிரபலமும் திருவனந்தபுரம் எம்பியுமான சசிதரூரின் மனைவி சுனந்தா புஷ்கர் கடந்த 2014ஆம் ஆண்டு டெல்லியில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்

ஆப்கானிஸ்தான் அணி டி20 உலகக் கோப்பையில் விளையாடுமா? வலுக்கும் சந்தேகம்!

கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்ட டி20 உலகக்கோப்பை போட்டிக்கான அட்டவணையை தற்போது ஐசிசி வெளியிட்டு உள்ளது