close
Choose your channels

சந்தானம் அடுத்த பட ரிலீஸ் தேதி அறிவிப்பு: வைரலாகும் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்!

Tuesday, December 1, 2020 • தமிழ் Comments

சந்தானம் நடிப்பில் ஜான்சன் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் ’ஏ1’. இந்த படம் நல்ல வெற்றியைப் பெற்று சந்தானத்திற்கு மேலும் ஒரு வெற்றி படமாக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது

இதனை அடுத்து தனக்கு வெற்றி படத்தை கொடுத்த ஜான்சன் இயக்கத்தில் மீண்டும் ஒரு படத்தில் நடிக்க சந்தானம் நடித்து வருகிறார் என்ற செய்தியையும், இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்ற செய்தியையும் பார்த்தோம்

இந்த நிலையில் இந்த படத்தின் டைட்டிலுடன் கூடிய பர்ஸ்ட் லுக் போஸ்டர் சற்று முன் வெளியாகி உள்ளது. ஜான்சன் இயக்கத்தில் சந்தானம் நடிப்பில் உருவாகும் இந்த படத்தின் டைட்டில் ’பாரீஸ் ஜெயராஜ்’ என்று வைக்கப்பட்டு அட்டகாசமான பர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியாகி உள்ளது. சந்தோஷ் நாராயணன் இந்த படத்திற்கு இசையமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

ஆர்தர் வில்சன் ஒளிப்பதிவில், துரைராஜ் கலை இயக்கத்தில், பிரகாஷ் மாபு படத்தொகுப்பில் உருவாகும் இந்தப் படத்தை லார்க் ஸ்டுடியோஸ் என்ற நிறுவனம் தயாரிக்க உள்ளது. இந்த படம் 2021 ஆம் ஆண்டு ஜனவரியில் வெளியாக இருப்பதாக ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரில் அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Get Breaking News Alerts From IndiaGlitz