ரஜினியிடமே என்னை மாட்டிவிட்டவன் தான் ஆர்யா.. சந்தானம் கூறிய தகவல்..!


Send us your feedback to audioarticles@vaarta.com


நடிகர் சந்தானம் நடித்த ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’ என்ற படத்தின் பிரமோஷன் விழா சமீபத்தில் நடந்தது. அதில் பேசிய சந்தானம், “என்னுடைய உயிர் நண்பன் ஆர்யா, என்னை ரஜினியிடமே மாட்டி விட்டவன்” என்று காமெடியாக பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
"ஆர்யா என்னுடைய உயிர் நண்பன். ‘ஒரு கல்லூரியின் கதை’ என்ற படத்தில் தான் நாங்கள் ரெண்டு பேரும் நட்பாக மாறினோம். இருவரும் முதல் படத்திலேயே க்ளோஸ் ஆகிவிட்டோம்.
அப்போது பெங்களூரில் இருந்து வந்த பணக்கார பெண்களிடம் ஆர்யா திடீரென, இவர்தான் சந்தானம்… தென்னிந்தியாவின் காமெடி சூப்பர் ஸ்டார்’ என்று கூறினார். அந்த பெண்கள் என்னை சந்தேகமாக பார்க்கத் தொடங்கினர். அப்போதுதான் ‘மன்மதன்’ உள்பட இரண்டு படங்கள் மட்டுமே நான் நடித்திருந்தேன்.
உடனே ஆர்யா என்னிடம் ‘ஒரு காமெடி பண்ணு’ என்று கூறினான். அவனும் சேர்ந்து காமெடி பண்ணினான். அப்போது டைரக்டர் அருகே வந்து ‘என்ன இதெல்லாம்?’ என்று எங்களை திட்டினார்.
அது மட்டுமல்ல, ‘சேட்டை’ படத்தில் நான் நடித்த போது, அந்த படத்திற்கு ‘காமெடி சூப்பர் ஸ்டார்’ என்ற டைட்டிலும் ஆர்யா கொடுத்துவிட்டார். அந்த சமயத்தில் ‘லிங்கா’ படத்தில் நான் ரஜினி சாரோட நடித்துக் கொண்டிருந்தபோது, ரஜினி கேட்டார்: ‘நீங்க தான் காமெடி சூப்பர் ஸ்டார்?’ நான், ‘ஐயோ இல்ல சார்… ஆர்யா தான் போட்டான்’ என்று சொன்னேன். அதற்கு ரஜினிகாந்த், ‘நீங்க சொல்லாம எப்படி போட்டுப்பான்?’ என்று கூறினார். ஆர்யா என்னை ‘ரஜினி இடமே மாட்டி விட்டான்’ என்று காமெடியாக கூறினார்.”
அதேபோல், இதே விழாவில் கலந்து கொண்ட எஸ்டிஆர், சந்தானம் குறித்து கூறிய போது, “சந்தானம் ஹீரோவாக நடித்தாலும், அவ்வப்போது முக்கியமான காமெடி படங்களிலும் நடிக்க வேண்டும். அதற்கு ஒரு ஆரம்பமாக இருக்கட்டும் என்பதற்காகத்தான் நான் ‘எஸ்.டி.ஆர் 49’ படத்தில் அவரை நடிக்க கேட்டேன். அவரும் ஒப்புக்கொண்டு உள்ளார். சந்தானம் இனிமேல் நிறைய காமெடி கேரக்டர்களில் நடிப்பார் என்று எதிர்பார்க்கிறேன்” என்றும் தெரிவித்தார்.
In Settai movie Arya has put "Comedy Superstar" title without my knowledge😅
— AmuthaBharathi (@CinemaWithAB) May 5, 2025
During Linga Shoot,
~Superstar #Rajinikanth: Neenga than comedy superstar ah❓😂
~#Santhanam: illa sir, Arya than potan
~Superstar #Rajinikanth: Neenga sollamala potrupan😁 pic.twitter.com/vfkN4Ci3Ml
#SilambarsanTR:
— AmuthaBharathi (@CinemaWithAB) May 5, 2025
"Myself & Santhanam are joining back in #STR49. Nowadays comedy films are becoming less & Action packed films are becoming high. I've watched #TouristFamily & liked it. Like this happy films should come & so we need Santhanam for it. I know Santhanam will come if… pic.twitter.com/qtcuC6qN1p
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments