முடிவுக்கு வந்தது சந்தானம் நடித்து வந்த 'சர்வர் சுந்தரம்'

  • IndiaGlitz, [Saturday,April 22 2017]

காமெடி நடிகரில் இருந்து ஹீரோவுக்கு புரமோஷன் ஆகி வெற்றி படங்களை கொடுத்து வரும் நடிகர் சந்தானம் நடித்து வந்த 'சர்வர் சுந்தரம்' திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்புடன் நடந்து வந்தது. இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு நேற்று மகாபலிபுரத்தில் முடிவடைந்தது. இதனையடுத்து இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் மிக விரைவில் ஆரம்பமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனந்த் பால்கி இயக்கத்தில் சந்தானம், வைபவி, நாகேஷ் பேரன் பிஜேஷ், கிட்டி, மயில்சாமி, ராதாரவி, உள்பட பலர் நடித்து வந்த இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார். கெனன்யா பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படத்திற்கு பி.கே.வர்மா ஒளிப்பதிவும், தினேஷ் பொன்ராஜ் படத்தொகுப்பும் செய்து வருகின்றனர்.

சென்னை, கோவா, துபாய் மற்றும் ஆஸ்திரேலியா நாடுகளில் படப்பிடிப்பு நடந்துள்ள இந்த படம் சந்தானம் படங்களின் பெரிய பட்ஜெட் படமாக கருதப்படுகிறது. இந்த படத்தில் சந்தானம் ஃபைவ் ஸ்டார் ஓட்டலில் செஃப் ஆக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

சூப்பர் ஸ்டார் ரஜினியின் '2.0' படத்திற்கு ஏற்பட்ட திடீர் மாற்றம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் லைகா நிறுவனத்தின் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகி வரும் ;2.0' திரைப்படத்தின் படப்பிடிப்பு 95% முடிந்துவிட்டதாக கூறப்படுகிறது.

'தளபதி 61' படத்தின் அதிகாரபூர்வ முக்கிய அறிவிப்புகள்

இளையதளபதி விஜய் நடித்து வரும் 'தளபதி 61' படத்தின் சென்னை படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது ராஜஸ்தானில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் பிரபல அரசியல் தலைவர் சந்திப்பு

கடந்த சில நாட்களாக தமிழக அரசியலில் ஒரு குழப்ப நிலை இருந்து வருகிறது என்பது அனைவரும் அறிந்த்தே. எந்த அரசியல்வாதி எந்த அணிக்கு ஆதரவு தருவார் என்பதை ஊகிக்க முடியாத அளவுக்கு மணிக்கொரு தரம் மாற்றம் நடந்து வருகிறது...

சிவாஜி புரடொக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகும் ஹாலிவுட் படம்

கோலிவுட் திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான சிவாஜி புரடொக்ஷன்ஸ் நிறுவனமும், அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள தர்லின் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனமும் இணைந்து திரைப்படம் ஒன்றை தயாரிக்க முடிவு செய்துள்ளன...

சிவகார்த்திகேயனின் 'வேலைக்காரன்: ஃபர்ஸ்ட்லுக் மற்றும் ரிலீஸ் தேதி அறிவிப்பு

கோலிவுட் திரையுலகில் குறுகிய காலத்தில் முன்னணி நடிகர்கள் பட்டியலில் இடம்பிடித்த நடிகர் சிவகார்த்டிகேயன், 'ரஜினிமுருகன்' மற்றும் 'ரெமோ' ஆகிய படங்களின் வெற்றிக்கு பின்னர் தற்போது 'வேலைக்காரன்' என்ற படத்தில் நடித்து வருகிறார்...