இரண்டாம் பாக வெற்றி பயணத்தில் இன்றுமுதல் சந்தானம்

  • IndiaGlitz, [Thursday,March 01 2018]

சந்தானம் நடிப்பில் ராம்பாலா இயக்கத்தில் கடந்த 2016ஆம் ஆண்டு வெளிவந்த வெற்றிப்படம் 'தில்லுக்கு துட்டு' இந்த படம் பாக்ஸ் ஆபீஸ் வசூலில் ஹிட்டாகிய நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தின் ஆரம்பகட்ட பணிகள் கடந்த சில மாதங்களாக நடந்து வந்தது.

இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியுள்ளது. இந்த பூஜை விழாவில் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.  ராம்பாலா இயக்கத்தில் உருவாகும் 'தில்லுக்கு துட்டு 2' திரைப்படத்தில் சந்தானத்திற்கு ஜோடியாக அறிமுக நாயகி தீப்தி நடிக்கவுளார்.

இதுகுறித்து சந்தானம் தனது சமூக வலைத்தளத்தில் கூறியதாவது: மிண்டும் ஒருமுறை பிளாக்பஸ்டர் குழுவுடன் இணைவது சந்தோஷம். இன்று முதல் முதல்கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் தொடங்குகிறது. உங்கள் அனைவரின் ஆசியுடன் இந்த படத்தையும் வெற்றிப்படமாக கொடுப்போம் என நம்புகிறேன்' என்று கூறியுள்ளார். இந்த படத்தில் நடிக்கும் மற்ற நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது.

More News

ரஜினி-கார்த்திக் சுப்புராஜ் படத்தில் இணையும் இளம் இசைப்புயல்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'காலா' மற்றும் '2.0' ஆகிய இரண்டு படங்களும் இவ்வருடத்தில் வெளியாகவுள்ள நிலையில் அவருடைய அடுத்த படத்தை கார்த்திக் சுப்புராஜ் என்பது தெரிந்ததே.

பிரித்து மேய்ந்துவிட்டார்! 'காலா' இசையமைப்பாளர் குறிப்பிடுவது யாரை?

'காலா' படத்திற்காக பிரபல பாடகர் யோகி பி அவர்களுடன் இணைந்து பணியாற்றியதில் மிக்க மகிழ்ச்சி.

வடிவேலுவை வழிக்கு கொண்டு வர ஷங்கர் செய்த அதிரடி

கடந்த 2006ஆம் ஆண்டு வெளியாகிய 'இம்சை அரசன் 23ஆம் புலிகேசி' திரைப்படம் நல்ல வெற்றி பெற்ற நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை அதே வடிவேலு, சிம்புதேவன் கூட்டணியில் தயாரிக்க ஷங்கர் முடிவு செய்தார்.

தந்தை-மகனை ஒன்று சேர்த்த ஸ்ரீதேவியின் மரணம்

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மரணம் காரணமாக அவரது கணவர் போனிகபூரும், அவரது முதல் மனைவியின் மகனான அர்ஜூன் கபூரும் இணைந்துள்ளதாக பாலிவுட் வட்டாரங்கள் கூறுகின்றன.

மீண்டும் சூப்பர் ஹீரோ கதைக்களத்தில் மிஷ்கின்

இயக்குனர் மிஷ்கின் நடிப்பில் ஜீவா நடித்த சூப்பர் ஹீரோ கதையான 'முகமூடி' திரைப்படம் கடந்த 2012ஆம் ஆண்டு வெளியாகி எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை.