close
Choose your channels

'என் மானத்தை விட உன் மானம் பெருசா'... சந்தானத்தின் 'கிக்' டிரைலர்

Saturday, January 21, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் திரை உலகின் முன்னணி காமெடி நடிகராக இருந்த சந்தானம் கடந்து சில ஆண்டுகளாக ஹீரோவாக நடித்து வரும் நிலையில் அவர் ஹீரோவாக நடித்து வரும் படங்களில் ஒன்று ‘கிக்’.

இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் சற்றுமுன் வெளியாகி இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது. பிரபல கன்னட இயக்குனர் பிரசாந்த்ராஜ் இயக்கத்தில் உருவாகி உள்ள இந்த படத்தில் சந்தானம் ஜோடியாக தன்யா ஹோப் நடித்துள்ளார். இவர் ஏற்கனவே ’தாராள பிரபு’ உள்ளிட்ட ஒரு சில படங்களில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அர்ஜுன் ஜன்யா இசையில் உருவாகிய இந்த படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலை சந்தானம் பாடியுள்ளார் என்பதும் அந்த பாடல் சமீபத்தில் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது. காமெடி மற்றும் ரொமான்ஸ் கலந்த இந்த படத்தில் தம்பி ராமையா, பிரம்மானந்தம், செந்தில், கோவை சரளா, மன்சூர் அலிகான், மனோபாலா, மொட்டை ராஜேந்திரன், ராகினி திவேதி ஆகியோர் நடித்துள்ளனர்

இந்த நிலையில் இன்று வெளியாகியுள்ள டிரைலரில் உள்ள இரண்டு நிமிட காட்சிகளிலும் முழுக்க முழுக்க காமெடி காட்சிகளாக இருப்பதால் நீண்ட இடைவெளிக்கு பிறகு சந்தானத்திற்கு இந்த படம் ஒரு வெற்றி படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சுதாகர் ராஜ் ஒளிப்பதிவில் உருவாகியிருக்கும் இந்த படம் விரைவில் ரிலீசாக உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.