close
Choose your channels

சந்தானம் நடித்த 'சர்வர் சுந்தரம்' ரிலீஸ் தேதி அறிவிப்பு

Wednesday, August 2, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நகைச்சுவை நடிகரில் இருந்து ஹீரோவாக பதவியுயர்வு பெற்ற நடிகர் சந்தானம், இனிமே இப்படித்தான், வல்ல்வனுக்கும் புல்லும் ஆயுதம் போன்ற வெற்றி படங்களை கொடுத்த நிலையில் தற்போது அவர் ஹீரோவாக நடித்த அடுத்த படமான 'சர்வர் சுந்தரம்' படம் ரிலீசுக்கு தயாராக உள்ளது.
ஏற்கனவே இந்த படம் சென்சாருக்கு சென்று 'யூ' சான்றிதழ் பெற்றுள்ள நிலையில் தற்போது ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படம் வரும் செப்டம்பர் 7ஆம் தேதி வியாழக்கிழமை வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரிலீஸ் தேதியுடன் கூடிய போஸ்டரும் சற்றுமுன்னர் சமூக இணையதளங்களில் வெளியாகியுள்ளது.
ஆனந்த் பால்கி இயக்கியுள்ள இந்த படத்தில் சந்தானம், வைபவி, நாகேஷ் பேரன் பிஜேஷ், கிட்டி, மயில்சாமி, ராதாரவி உள்பட பலர் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இந்த படத்தை கெனன்யா பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்திற்கு பிகே வர்மா ஒளிப்பதிவும், தினேஷ் பொன்ராஜ் படத்தொகுப்பும் செய்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.