70 வருடம் - 7 நிமிடம். சாந்தனு பாக்யராஜின் புதிய முயற்சி

  • IndiaGlitz, [Friday,August 12 2016]

இந்தியாவின் சிறந்த திரைக்கதையாசிரியர்களில் ஒருவரான கே.பாக்யராஜின் ஒரே மகன் சாந்தனு பாக்யராஜ், கோலிவுட்டில் ஒருசில படங்களில் நடித்திருந்தபோதிலும், அவர் எதிர்பார்த்த வெற்றி இன்னும் கிடைக்கவில்லை. இந்நிலையில் ஒரே ஒரு வெற்றியை எதிர்நோக்கி காத்திருக்கும் சாந்தனுவுக்கு விரைவில் வெளிவரவுள்ள 'வாய்மை' படம் நம்பிக்கையை அளித்துள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து விரைவில் ரிலீஸ் ஆகவுள்ளது.
இந்நிலையில் இந்த படத்தின் சிங்கிள் பாடல் வரும் சுதந்திர தினமான ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளிவரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 70வது சுதந்திர தினத்தை இந்தியர்கள் அனைவரும் கொண்டாடும் நிலையில் 7 நிமிட பாடல் ஒன்றை 'வாய்மை' படக்குழுவினர் வெளியிடவுள்ளனர். இதுகுறித்த தகவலுடன் கூடிய போஸ்டர் ஒன்று சற்று முன்னர் இணணயதளங்களில் வெளியாகியுள்ளது
சாந்தனு, கவுண்டமணி, ராம்கி, முக்தாபானு, தியாகராஜன், பிரித்விராஜ், ஊர்வசி, பூர்ணிமா பாக்யராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தை செந்தில்குமார் இயக்கியுள்ளார்.

More News

'கவலை வேண்டாம்' படக்குழுவுக்கு இனி கவலை இல்லை

ஜீவா நடித்த 'கவலை வேண்டாம்' படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் சமீபத்தில் முடிவடைந்து இந்த படம் வரும் அக்டோபர் 7ஆம் தேதி...

கபாலி' பாணியில் கலக்க வருகிறது 'இருமுகன்'

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'கபாலி' திரைப்படத்தின் சென்னை வசூல் குறித்து நாம் அறிந்ததே. வெளியான மூன்றே வாரத்தில் இந்த படம் சென்னையில் மட்டும் ரூ.11...

'தல 57' இயக்குனர் சிவாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்

பிரபல இயக்குனர் சிவா தமிழில் இயக்கியது மூன்றே மூன்று படங்கள்தான். அவற்றில் இரண்டு படங்கள் அஜித் நடித்த வீரம் மற்றும் 'வேதாளம்'. மேலும் அஜித்துடன் இணைந்து தற்போது மூன்றாவது படத்தையும் இயக்கி வருகிறார்...

சிம்புவின் 'AAA' கதை இதுதானா?

சிம்பு நடித்த 'அச்சம் என்பது மடமையடா' படத்தின் ரிலீஸ் தேதி செப்டம்பர் 9 என அறிவிக்கப்பட்டுள்ள...

செல்வராகவனின் 'நெஞ்சம் மறப்பதில்லை' டீசர் ரிலீஸ் தேதி மற்றும் நேரம்

ஆர்யா, அனுஷ்கா நடித்த 'இரண்டாம் உலகம்' படத்திற்கு பின்னர் மூன்று வருட இடைவெளிக்கு பின்னர் பிரபல இயக்குனர் செல்வராகவன்...