close
Choose your channels

ஓடிடியில் சாந்தனுவின் 'இராவண கோட்டம்': ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

Tuesday, June 6, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சாந்தனு பாக்கியராஜ் நடிப்பில் விக்ரம் சுகுமாரன் இயக்கத்தில் உருவான ‘இராவண கோட்டம்’ என்ற திரைப்படம் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியானது என்பதும் இந்த படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் கிடைத்ததை அடுத்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது என்பது தெரிந்தது.

எதிர்பார்த்தது போலவே சாந்தனு பாக்யராஜுக்கு இந்த படம் ஒரு திருப்பத்தை கொடுத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் திரையரங்குகளில் வெற்றி பெற்ற ‘இராவண கோட்டம்’ திரைப்படம் தற்போது ஓடிடியில் ரிலீஸ் ஆவது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

‘இராவண கோட்டம்’ திரைப்படம் அமேசான் ப்ரைம் ஓடிடியில் வரும் 16ம் தேதி முதல் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து இதுவரை திரையரங்குகளில் பார்க்காதவர்கள் ஓடிடியில் ‘இராவண கோட்டம்’ படத்தை பார்த்து ரசிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

சாந்தனு, ‘கயல்’ ஆனந்தி, பிரபு, இளவரசு, தீபா சங்கர், அருள்தாஸ் உள்ளிட்டோர் நடித்திருந்த இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகர் இசையமைத்துள்ளார். கண்ணன் ரவி தயாரித்த இந்த படம் தென்மாவட்டங்களில் நிலவும் சாதிய அரசியல், கருவேல மரத்தால் ஏற்படும் பாதிப்பு குறித்து அலசி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.