விஜய் சேதுபதியின் புத்திசாலித்தனம் இல்லாத முடிவு.. நெட்டிசன் விமர்சனத்திற்கு சாந்தனு பதிலடி..!


Send us your feedback to audioarticles@vaarta.com


விஜய் சேதுபதி புத்திசாலித்தமான முடிவை எடுக்கவில்லை என்று நெட்டிசன் ஒருவர் விமர்சனம் செய்ததற்கு, நடிகர் சாந்தனு பதிலடி கொடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
’மகாராஜா’ வெற்றிக்கு பிறகு, விஜய் சேதுபதிக்கு பிரபல இயக்குனர்களின் படங்களில் நடிக்க வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றன. சமீபத்தில், பிரபல இயக்குனர் பூரி ஜெகநாத் இயக்கத்தில் உருவாகும் படத்தில் விஜய் சேதுபதி நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், பூரி ஜெகநாத் சமீப காலமாக ஹிட் படம் கொடுக்கவில்லை என்பதால், ஒரு நெட்டிசன், "மகாராஜாவுக்கு பிறகு விஜய் சேதுபதி தனது படங்களை புத்திசாலித்தனமாக தேர்வு செய்வார் என்று நினைத்தேன். ஆனால், ஒரு அவுட்டேட் இயக்குனரை தேர்வு செய்துள்ளார்" என்று விமர்சித்தார்.
இந்த விமர்சனத்துக்கு பதிலடி கொடுத்த நடிகர் சாந்தனு, "யாரைப் பற்றியும் இப்படி அவதூறாக விமர்சிக்க வேண்டாம். பொது இடத்தில் வார்த்தைகளை கவனமாக பயன்படுத்துங்கள். பூரி ஜெகநாத் ஒரு பிரபலமான தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர். மற்றவர்களுக்கு நாம் கொடுக்க வேண்டிய மரியாதையை கொடுக்க வேண்டும். இதை உங்களிடமிருந்து நான் எதிர்பார்க்கவில்லை" என்று கூறியுள்ளார்.
சாந்தனுவின் பதிலடி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Never say that about someone brother…
— Shanthnu (@imKBRshanthnu) March 30, 2025
Please use words wisely on public platform… eod he is a reputed filmmaker and there’s a certain amount of respect we shud give another person ..
Did not expect this from you https://t.co/Ieapsl1N49
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments