எஸ்.ஜே.சூர்யாவின் அடுத்த படத்தில் இணைந்த 'பில்லா பாண்டி' நாயகி

  • IndiaGlitz, [Tuesday,October 15 2019]

இயக்குனர் ராதாமோகன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா நடித்துவரும் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்திற்கு ’பொம்மை’ என்ற டைட்டில் வைக்க படக்குழுவினர் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்த படத்தில் எஸ்ஜே சூர்யா ஜோடியாக பிரியா பவானிசங்கர் நடித்து வருவதாக தகவல்கள் வெளிவந்த நிலையில் தற்போது நடிகை சாந்தினி தமிழரசனும் இந்த படத்தின் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார். இவர் ஏற்கனவே ’பில்லா பாண்டி’ படத்தில் ஆர்.கே.சுரேஷ் ஜோடியாகவும், மேலும் பல தமிழ்ப்படங்களிலும் நடித்துள்ளார்.

மேலும் பிரபல இயக்குனர் பாலாஜி சக்திவேல் இயக்கவுள்ள அடுத்த படத்திலும் சாந்தினி தமிழரசன் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த இரண்டு படங்கள் ரிலீஸ் ஆனபின்னர் சாந்தினி தமிழ் சினிமாவின் குறிப்பிடத்தக்க நாயகிகளில் பட்டியலில் இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

More News

கலைஞானத்திற்கு கொடுத்த வீடு லதா ரஜினி பெயரில் உள்ளதா?

சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தன்னை முதன்முதலாக ஹீரோவாக்கி அழகு பார்த்த பழம்பெரும் தயாரிப்பாளர் கலைஞானம் அவர்களுக்கு வீடு ஒன்றை பரிசாக அளித்தார் என்பது தெரிந்ததே 

ஜெயம் ரவியின் அடுத்த படம் குறித்து மாஸ் அப்டேட்

ஜெயம் ரவி நடித்த 'கோமாளி' திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்ற நிலையில் தற்போது அவர் 'பூமி' மற்றும்' ஜனகனமன' ஆகிய இரண்டு படங்களில் நடித்து வருகிறார் 

விக்ரம் அடுத்த படத்திலும் இணைந்த ஒரு கிரிக்கெட் பிரபலம்

சந்தானம் நடித்து வரும் 'டிக்கிலோனா' திரைப்படத்தில் பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்பஜன்சிங் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார் என்ற செய்தி வெளியானதை சற்றுமுன் பார்த்தோம்.

'மிக மிக அவசரம்' புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு!

சுரேஷ் காமாட்சி இயக்கிய 'மிக மிக அவசரம்' திரைப்படம் கடந்த 11ஆம் தேதி வெளியாக இருந்தது. ஆனால் திடீரென 'அருவம்' மற்றும் 'பெட்ரோமாக்ஸ்' ஆகிய திரைப்படங்கள் வெளியாகியதால்

என் பின்னாடி லோலோன்னு அலைஞ்சவங்க தான் அந்த நாலு பையன்களும்! மீராமிதுன்

பிக் பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான மீரா மிதுன் இன்று காலையிலிருந்தே சமூக வலை தளங்களில் வீடியோக்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார் என்பது தெரிந்ததே.