close
Choose your channels

ஒரே நேரத்தில் அண்ணன் - தம்பி படங்களில் சந்தோஷ் நாராயணன்

Saturday, January 23, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினியின் 'கபாலி', விஜய்யின் 60வது படம், , சந்தானம் நடிக்கவுள்ள 'சர்வம் சுந்தரம்' உள்பட பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து வரும் பிரபல இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் அடுத்ததாக செல்வராகவன் இயக்கும் அடுத்த படத்திற்கு இசையமைக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. ஏற்கனவே செல்வராகவனின் சகோதரர் தனுஷின் 'கொடி' படத்திற்கும் இசையமைத்து வரும் இவர் ஒரே நேரத்தில் அண்ணன் மற்றும் தம்பி ஆகிய இருவருடனும் இணைந்து பணியாற்றுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

கவுதம் மேனனின் 'ஒன்றாக எண்டர்டெயின்மெண்ட்' நிறுவனம் தயாரிக்கவுள்ள இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா மற்றும் ரெஜினா முக்கிய வேடங்களில் நடிக்கவுள்ளனர். இந்த படத்தில் தற்போது புதியதாக இணைந்துள்ளார் சந்தோஷ் நாராயணன்.

இந்த படத்தின் மற்ற நடிகர், நடிகைகள் மற்றும் டெக்னீஷியன்கள் தேர்வு நடைபெற்று வருவதாகவும், விரைவில் இந்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.