ஓடிடியில் ரிலீஸாகும் 3 நாட்களில் திரையரங்குகளில் இருந்து தூக்கப்பட்ட படம்!

திரையரங்குகளில் ரிலீசாகி மூன்றே நாட்களில் தூக்கப்பட்ட திரைப்படம் தற்போது ஓடிடியில் விரைவில் ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரபல ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் இயக்கத்தில் உருவான திரைப்படம் ’இனம்’. இந்த திரைப்படம் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளிவந்த நிலையில் ஒரு சில அரசியல்வாதிகள் இந்த திரைப்படத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து மூன்று நாட்களில் திரையரங்குகளில் இருந்து தூக்கப்பட்டது.

இதனை அடுத்து தற்போது 7 வருடம் கழித்து இந்த படம் ஓடிடியில் பிளாட்பாரத்தில் ரிலீஸ் ஆக உள்ளதாக இயக்குனர் சந்தோஷ்சிவன் தனது சமூக வலைத்தளத்தில் அறிவித்துள்ளார். இலங்கையில் நடைபெற்ற தமிழ்-சிங்கள இனப்போர் குறித்த கதையம்சம் கொண்ட இந்த படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் இருப்பதாக அரசியல்வாதிகள் எதிர்ப்பு தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

உகந்தா, கரண், சரிதா, கருணாஸ், அனாகி, ஷ்யாம் சுந்தர், செளம்யா உள்பட பலர் நடித்துள்ள இந்த திரைப்படத்திற்கு விஷால் இசையமைத்திருந்தார். இந்த படம் ஓடிடியில் வரவேற்பை பெறுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More News

ஆக்சிமீட்டரை பயன்படுத்துவது எப்படி? 'தளபதி 65 நாயகி பூஜா ஹெக்டேவின் வீடியோ வைரல்!

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பாதித்து வரும் நிலையில் கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வுகளை திரை உலக பிரபலங்கள் பலர் ஏற்படுத்தி வருகின்றனர் என்பது தெரிந்ததே 

ஓபிஎஸ்  சகோதரர் இன்று காலமானார்..! சோகத்தில் குடும்பம்...!

அதிமுக-வின் ஒருங்கிணைப்பாளரான  ஓ.பன்னீர்செல்வத்தின் , சகோதரர் பாலமுருகன் இன்று  காலமானார்.

சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுமா? வெளியான தகவல்!

கொரோனா பரவல் காரணமாக இந்தியா முழுக்கவே தற்போது பதற்றம் அதிகரித்து வருகிறது.

கொரோனா குறித்த சந்தேகங்கள்: நடிகர் கார்த்தியின் கேள்விகளும் டாக்டரின் பதில்களும்!

தமிழகத்தில் சென்னை உள்பட அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதை அடுத்து கொரோனா வைரஸ் குறித்து மக்களுக்கும் எழும் சந்தேகங்கள் குறித்து நடிகர் கார்த்தி

2 தவணை  கொரோனா ஊசி போட்ட, காவல் உதவி ஆணையர் உயிரிழப்பு...!

கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சையளித்து வந்த நிலையில், பல்லாவரம் காவல் ஆய்வாளர் இன்று சிகிச்சை பலனில்லாமல்  உயிரிழந்தார்.