குண்டு உடல் பிரச்சனை: சரண்யா மோகனின் கணவரும் பதிலடி

  • IndiaGlitz, [Friday,June 09 2017]

வேலாயுதம், யாரடி நீ மோகினி, அப்புக்குட்டி, வெண்ணிலா கபடிக்குழு உள்பட பல படங்களில் நடித்த நடிகை சரண்யா மோகனின் சமீபத்திய புகைப்படம் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் இணையதளங்களில் வெளியானது. நடிக்கும்போது ஸ்லிம் ஆக இருந்த சரண்யா மோகன், இந்த படத்தில் குண்டாக இருந்ததை கண்ட நெட்டிசன்கள் அவரை கேலியும் கிண்டலும் செய்தனர்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் சரண்யா மோகன் தனது சமூக வலைத்தளத்தில் பதிலளித்தார் என்பதை நேற்று பார்த்தோம். சரண்யாவில் பதிலுக்கு நல்ல வரவேற்பு இருந்த நிலையில் இன்று சரண்யாவின் கணவர் டாக்டர் அரவிந்த் கிருஷ்ண்ன் அவர்களும் தனது சமூக வலைத்தளத்தில் நெட்டிசன்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

அவர் கூறியதாவது: நாட்டில் எத்தனையோ முக்கிய பிரச்சனைகள் இருக்கும்போது சரண்யா வெயிட் போட்டது முக்கியமான பிரச்சனை இல்லை. என் மனைவி திருமணத்திற்கு பிறகு நடிக்கவில்லை. அதை நான் பாராட்டுகிறேன். அவர் தாயான பிறகு வெயிட் போட்டதை கிண்டல் செய்பவர்களுக்கு நல்ல எண்ணம் இல்லை என்று அவர் தனது சமூக வலைத்தளத்தில் மலையாளத்தில் பதிவு செய்துள்ளார்.

More News

பாரதிராஜா, கமல்ஹாசன் பட இசையமைப்பாளருக்கு விவாகரத்து

இயக்குனர் இமயம் பாரதிராஜா இயக்கிய 'பொம்மலாட்டம், கமல்ஹாசன் 10 வேடங்களில் நடித்த 'தசாவதாரம்' ஆகிய தமிழ்படங்களுக்கும் ஏராளமான இந்தி படங்களுக்கும் இசையமைத்தவர் ஹிமேஷ் ரேஷ்மியா. இவருக்கும் கோமல் என்பவருக்கும் கடந்த சில வருடங்களுக்கு முன் திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு ஸ்வயம் என்ற மகன் உள்ளார்....

உங்கள் தம்பிகளுக்கு அரசியல் நாகரீகத்தை கற்று கொள்ளுங்கள். சீமானுக்கு நடிகர் ஜீவா வேண்டுகோள்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது குறித்து தொடர்ந்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்த வந்த நாம் தமிழர் கட்சியின் சீமான், 'ரஜினிகாந்த் தான் நடித்த 'கபாலி' படத்திற்கு வாங்கிய சம்பளம் குறித்து கணக்கை காட்டுவாரா?

வித்தியாசமாக ஆரம்பமாகும் வெங்கட்பிரபுவின் அடுத்த இன்னிங்ஸ்

கோலிவுட் திரையுலகில் நடிகராக அறிமுகமாகி இயக்குனராக வெற்றி பெற்று தற்போது தயாரிப்பாளர் அவதாரமும் எடுத்துள்ள வெங்கட்பிரபு தற்போது மீண்டும் ஒரு புதிய முயற்சியை தனது அடுத்த இன்னிங்ஸ் ஆக ஆரம்பிக்க உள்ளார். அதுதான் குறும்படம் தயாரிப்பது.

கேரளாவில் மதுவிலக்கு வாபஸ்: அரசின் முடிவுக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மதுக்கடைகளுக்கு எதிராக மக்கள் தீவிர போராட்டம் நடத்தி வருகின்றனர்.

கணவரிடம் இருந்து கமிஷனர் பதவியை பெற்ற ஐபிஎஸ் அதிகாரி

காவல்துறையை பொருத்தவரையில் ஒரு அதிகாரி மாற்றலாகி போகும்போது அந்த பதவிக்கு புதியதாக வரும் அதிகாரியிடம் பொறுப்பை ஒப்படைப்பது என்பது சாதாரண நிகழ்வுதான்.