குண்டான உடலை கேலி செய்த ரசிகர்களுக்கு பதிலடி கொடுத்த சரண்யா மோகன்

  • IndiaGlitz, [Thursday,June 08 2017]

வேலாயுதம், யாரடி நீ மோகினி, அப்புக்குட்டி, வெண்ணிலா கபடிக்குழு உள்பட பல படங்களில் நடித்தவர் நடிகை சரண்யா மோகன். இவர் தனது நீண்ட நாள் நண்பர் அரவிந்த் கிருஷ்ணன் என்பவரை கடந்த 2015ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு குழந்தை சமீபத்தில் பிறந்தது.

இந்த நிலையில் திரைப்படங்களில் நடிக்கும்போது ஸ்லிம் ஆக இருந்த சரண்யாமோகன், குழந்தை பெற்றவுடன் உடல் எடை அதிகரித்து குண்டாக மாறினார். இவருடைய சமீபத்திய தோற்றத்தை சமூக வலைத்தளங்களில் பலர் கேலியும் கிண்டலும் செய்தனர். ஒருசில இணையதளங்கள் அவருடைய குண்டு உடலை கேலி செய்து செய்தியும் வெளியிட்டன.

இந்நிலையில் தனது குண்டு உடல் மீதான விமர்சனத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தக்க பதிலடி ஒன்றை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். அவர் கூறியதாவது: 'நான் ஒரு பெண், ஒரு தாயாக இருப்பதில் மிகவும் பெருமிதம் கொள்கிறேன். தாய்மைக்கு பின் ஒரு பெண்ணின் தோற்றத்தில் மாற்றங்கள் ஏற்படும். நான் எப்படி இருக்கிறோனோ அதனை ஏற்றுக்கொள்ளும் உண்மையான மனிதர் எனக்கு கிடைத்திருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது' என பதிவு செய்துள்ளார். மேலும் அவர் தன் குழந்தையுடன் இருக்கும் புகைப்படங்களையும் அதில் பதிவேற்றி உள்ளார்.

More News

ஜனாதிபதி தேர்தல் தேதி அறிவிப்பு

இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி அவர்களின் பதவிக்காலம் வரும் ஜூலை மாதத்துடன் முடிவடைவதால் புதிய ஜனாதிபதியை தேர்வு செய்ய நடைபெறும் தேர்தலின் தேதி இன்று மாலை அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணைய வட்டாரங்களில் இருந்து செய்தி வெளிவந்த நிலையில் சற்று முன்னர் ஜனாதிபதி தேர்தலுக்கான தேதியை தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமாக அறிவித்து

லஞ்சம் கொடுத்த பணம் வீடுதேடி வரவேண்டுமா? 1100க்கு டயல் செய்யுங்கள்!

சாட்டிலைட் முதல் சகல துறைகளிலும் வளர்ச்சி அடைந்து வரும் இந்தியா, லஞ்சத்தை ஒழிப்பதில் மட்டும் மிகவும் பின் தங்கியுள்ளது. சமீபத்தில் எடுக்கப்பட்ட ஒரு சர்வேயில் ஆசிய அளவில் அதிக லஞ்சம், ஊழல் நடைபெறுவது இந்தியாவில்தான் என்பது தெரிய வந்துள்ளது...

'பாகுபலி 2' படம் பார்க்க 10 ரூபாய் கூட செலவு செய்ய மாட்டேன். தேசிய விருது இயக்குனர்

பிரபல இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலியின் 'பாகுபலி 2' திரைப்படம் கடந்த ஏப்ரல் மாதம் வெளியாகி இந்தியாவில் மட்டுமின்றி உலக அளவில் ஹிட் ஆகியது. இந்த படத்தின் வசூல் ரூ.1700 கோடியை நெருங்கி புதிய சாதனை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த படத்தை பெரும்பாலான திரையுலக பிரமுகர்கள் பாராட்டி வருகின்றனர்...

ரஜினியின் 'காலா' இன்று முதல் வேற லெவல் படப்பிடிப்பு

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் 'காலா' கரிகாலன் திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக மும்பயில் நடைபெற்று வருகிறது. மும்பை டான் மற்றும் முஸ்லீம் கேரக்டரில் ரஜினி நடித்து வருவதாக கூறப்படும் நிலையில் இதுவரை இந்த படத்தின் வசனக்காட்சிகளின் படப்பிடிப்பு நடைபெற்றது...

ரஜினியுடன் முதலமைச்சர் மனைவி திடீர் சந்திப்பு

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சமீபத்தில் ரசிகர்களை சந்தித்த போது அரசியலுக்கு வருவது குறித்து பரபரப்பாக சில கருத்துக்களை கூறினார். அதுமுதல் அவர் அரசியலுக்கு வரவேண்டும் என்று பலரும், வரக்கூடாது என்று சிலரும் கூறி வருகின்றனர்....