சரத்குமார் - அசோக்செல்வனின் 'போர் தொழில்': ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

  • IndiaGlitz, [Wednesday,May 17 2023]

இளம் ஹீரோ அசோக் செல்வனுடன் சரத்குமார் நடித்து வந்த 'போர் தொழில்’ என்ற படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்து தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது

’சூது கவ்வும்’ என்ற திரைப்படத்தில் அறிமுகம் ஆகி அதன் பிறகு ‘தெகிடி’ ’கூட்டத்தில் ஒருவன்’ ’ஹாஸ்டல்’ உட்பட பல திரைப்படங்களில் நாயகனாக நடித்தவர் இளம் ஹீரோ அசோக் செல்வன். இவருடன் சரத்குமார் இணைந்து நடித்த ’போர் தொழில்’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விஜய்யின் ’வாரிசு’ ராகவா லாரன்ஸ் நடித்த ‘ருத்ரன்’ மணிரத்னம் இயக்கிய ‘பொன்னியின் செல்வன்’ போன்ற படங்களில் சமீபத்தில் நடித்த சரத்குமார் தற்போது இளம் ஹீரோ அசோக் செல்வன் உடன் இணைந்து நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தொழில்நுட்ப பணிகள் முடிவடைந்துள்ள நிலையில் ஜூன் 9ஆம் தேதி இந்த படம் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் அசோக் செல்வன் ஜோடியாக ’கிடாரி’ ’வெற்றிவேல்’ போன்ற படங்களில் நடித்த நடிகை நிகிலா விமல் நடித்துள்ளார். அப்பலாஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தை விக்னேஷ் ராஜா என்பவர் இயக்கி உள்ளார்.

More News

ஹெல்மெட் அணியாமல் டூவீலர் பயணம்… சர்ச்சையில் மாட்டிய இரு பெரிய பிரபலங்கள்!

பாலிவுட் சினிமாவில் பிக் பி என அழைக்கப்படும் சூப்பர் ஸ்டார் நடிகர் அமிதாப் பச்சனும் அதேபோல முன்னணி நடிகைகளுள் ஒருவருமாகிய அனுஷ்கா சர்மா

'SK 21' படப்பிடிப்பை திடீரென நிறுத்திய அதிகாரிகள்: ஏமாற்றத்துடன் சென்னை திரும்பிய படக்குழு..!

சிவகார்த்திகேயன் நடிப்பில், ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், உலகநாயகன் கமல்ஹாசனின் ராஜ்கமல் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'SK 21' இந்த படத்தின்

இந்த வாரம் திரையரங்கில் ரெண்டே படம் தான்.. ரெண்டுமே மாஸ் ஆக இருக்குமா?

ஒவ்வொரு வாரமும் தமிழில் திரையரங்குகளில் குறைந்தது நான்கு படங்கள் வெளியாகி கொண்டிருக்கும் நிலையில் இந்த வாரம் இரண்டு படங்கள் மட்டுமே வெளியாக உள்ளது ரசிகர்களுக்கு அதிருப்தியை

முதல்முறையாக குழந்தையின் முகத்தை ரசிகர்களுக்கு காட்டிய பூர்ணா.. க்யூட் புகைப்படங்கள்- வீடியோ..!

நடிகை பூர்ணாவுக்கு கடந்த ஏப்ரல் மாதம் குழந்தை பிறந்த நிலையில் தற்போது முதல் முறையாக தனது சமூக வலைதள பக்கத்தில் குழந்தையின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டுள்ள நிலையில் அந்த

ZEE5 தளத்தில் சாதனை செய்த வெற்றிமாறனின் 'விடுதலை'..!

இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் சூரி நடிப்பில்”விடுதலை பாகம் 1” திரைப்படம் ZEE5 தளத்தில் 100 மில்லியன் பார்வை நிமிடங்களைக் கடந்து சாதனை படைத்துள்ளது