22 வருட அன்பு பயணம்.. சரத்குமார் வெளியிட்ட நெகிழ்ச்சியான வீடியோ..!

  • IndiaGlitz, [Saturday,February 04 2023]

நடிகர் சரத்குமார் இன்று தனது 22 வது திருமண நாளை கொண்டாடி வரும் நிலையில் இது குறித்த நெகிழ்ச்சியான வீடியோவை தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த வீடியோ வைரல் ஆகி வருகிறது.

தமிழ் திரை உலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சரத்குமார், நடிகை ராதிகாவை கடந்த 2001ஆம் ஆண்டு இதே நாளில் தான் திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ராகுல் என்ற மகன் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ராதிகாவை திருமணம் செய்து 22 ஆண்டுகள் ஆனதை அடுத்து சரத்குமார் நெகிழ்ச்சியான வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார். அந்த வீடியோவில் 22 வருடங்கள் எங்கள் வாழ்வின் நீண்ட பேரின்ப பயணம், அன்பின் பயணம், புரிதலின் பயணம், தியாகங்களின் பயணம், ஒற்றுமையின் பயணம். இந்த மகிழ்ச்சியான பயணம் அனைத்து வகையான உணர்ச்சிகளையும், மகிழ்ச்சியையும், சோகத்தையும், புகழ்களையும் கண்டுள்ளது.

ஆனாலும் நம் இருவரையும் விதி ஒன்றாக வைத்திருந்தது. நாம் இருவரும் ஒன்றாக பயணம் செய்வதற்கு நம்முடைய புரிதல் மற்றும் தியாகம் ஆகியவையே காரணமாகும். இந்த நல்ல நாளில் எல்லாம் வல்ல இறைவனை நான்பிரார்த்திக்கின்றேன். அவர் எப்போதும் நம்மை ஒன்றாகவும் நம் அழகான குடும்பத்தையும் நாம் எதிர்காலம் முழுவதையும் ஒன்றாக வைத்திருக்க வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார். இந்த பதிவு தற்போது வைரல் ஆகி வருகிறது.

More News

அடுத்தகட்ட படப்பிடிப்புக்கு வெளிநாட்டுக்கு பறக்கும் 'இந்தியன் 2' குழு.. எந்த நாடு தெரியுமா?

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் 'இந்தியன் 2' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.

விவாகரத்தான கணவருடன் மீண்டும் இணைந்த நடிகை லிசி? வைரல் புகைப்படங்கள்..!

பிரபல இயக்குனர் பிரியதர்ஷனை நடிகை லிசி விவாகரத்து செய்த நிலையில் தற்போது தனது மகனின் திருமணத்தின்போது மீண்டும் இருவரும் இணைந்து புகைப்படங்கள் எடுத்துக் கொண்டதை ரசிகர்கள் ஆச்சரியமாக பார்த்து

'ஏகே 62' படத்தில் இருந்து விலகியதை உறுதி செய்த விக்னேஷ் சிவன்.. அடுத்த படம் என்ன தெரியுமா?

அஜித் நடிப்பில், விக்னேஷ் சிவன் இயக்கத்தில், லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் அனிருத் இசையில் 'ஏகே 62' என்ற படம் உருவாக இருப்பதாக கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது

ஷாருக்கான், சல்மான்கான், ஹிருத்திக் ரோஷன்.. மூவரும் சேர்ந்தாலும் ரஜினியை வெல்ல முடியாது: 'பதான்' இயக்குனர்

ஷாருக்கான், சல்மான்கான் மற்றும் ஹிருத்திக் ரோஷன் ஆகிய மூவரும் சேர்ந்தாலும் ரஜினியை வெல்ல முடியாது என ஷாருக்கான் நடித்த 'பதான்' திரைப்படத்தின் இயக்குனர் சித்தார்த் கூறியிருப்பது

கமல் கட்சியில் இருந்து விலகி புதிய அரசியல் கட்சி ஆரம்பித்த விஜய் பட வில்லன்..!

 கமல் கட்சியிலிருந்து விலகிய விஜய் பட வில்லன் இன்று புதிய அரசியல் கட்சியை ஆரம்பித்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.