40 தொகுதிகளிலும் தனித்து போட்டி: பிரபல நடிகரின் கட்சி அறிவிப்பு

  • IndiaGlitz, [Wednesday,March 06 2019]

நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக, மற்றும் திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு கிட்டத்தட்ட தொகுதிகள் ஒதுக்கப்பட்டு கூட்டணி இறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் இரு கூட்டணியிலும் இணையாத கட்சிகள் மூன்றாவது கூட்டணி அல்லது தனித்து நிற்க வேண்டிய நிலையில் உள்ளன.

இந்த நிலையில் 40 தொகுதிகளிலும் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தனித்து போட்டியிடும் என அக்கட்சியின் தலைவரும் நடிகருமான சரத்குமார் அறிவித்துள்ளார். சமீபத்தில் சரத்குமார், விஜயகாந்தை சந்தித்ததால் இருவரும் இணைந்து கூட்டணி வைக்க வாய்ப்பு இருந்ததாக கருதப்பட்டது. ஆனால் விஜய்காந்த் அதிமுக, திமுக என மாறி மாறி பேசிவருவதால் சரத்குமார் தனித்து போட்டி என்ற முடிவை எடுத்துள்ளார்.

அதேபோல் டிடிவி தினகரனின் அமமுக, கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் மற்றும் சீமானின் நாம் தமிழர் கட்சி ஆகிய கட்சிகளும் தனித்து போட்டியிடவுள்ளதால் வரும் பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் ஆறுமுனை போட்டி ஏற்பட்டுள்ளது.

More News

சிம்புவின் அடுத்த பட இயக்குனர்-தயாரிப்பாளர் குறித்த தகவல்

சிம்பு நடித்த 'வந்தா ராஜாவாதான் வருவேன்' திரைப்படம் சமீபத்தில் வெளியான நிலையில் தற்போது அவர் வெங்கட்பிரபுவின் 'மாநாடு' என்ற அரசியல் படத்தில் நடித்து வருகிறார்

கார்த்தியின் அடுத்த படத்தில் ஜோதிகா?

'தேவ்' படத்தை அடுத்து கார்த்தி தற்போது 'மாநகரம்' இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் ஒரு படத்தில் நடித்து வருகிறார். நாயகியே இல்லாத த்ரில் படமாக இந்த படம் உருவாகி வருகிறது.

அடுத்தடுத்த வாரத்தில் வெளியாகும் ஜிவி பிரகாஷின் 2 படங்கள்

ஜிவி பிரகாஷ் நடிப்பில் இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கிய 'வாட்ச்மேன்' திரைப்படம் வரும் ஏப்ரல் 12ஆம் தேதி தமிழ்ப்புத்தாண்டு விருந்தாக வெளியாகவுள்ளது என்ற செய்தியை சற்றுமுன் பார்த்தோம்

மணிரத்னம் இயக்கும் 'பொன்னியின் செல்வன்' படத்தில் யார் யார்?

அமரர் கல்கியின் காலத்தால் அழியாத காவிய வரலாற்று நாவலான 'பொன்னியின் செல்வன்' கதையை திரைப்படமாக்க எம்ஜிஆர், சிவாஜி, கமல் உள்பட பலர் முயற்சித்த நிலையில்

விஜய் பெற்றோருடன் சூர்யாவின் செல்பி !

பழம்பெரும் நடிகர் சிவகுமார் என்றவுடன் அனைவருக்கும் ஞாபகம் வருவது அனேகமாக செல்பியாகத்தான் இருக்கும். சிவகுமார் எவ்வளவோ கேட்டுக்கொண்டு ஆர்வக்கோளாறில்