ஒரு கொலைகாரனை தெரிஞ்சுகிடனும்னா, அவனோட கொலையை படிக்கணும்: 'போர் தொழில்' டிரைலர்..!

  • IndiaGlitz, [Wednesday,May 31 2023]

சரத்குமார் மற்றும் அசோக் செல்வன் நடிப்பில் உருவான ’போர் தொழில்’ என்ற திரைப்படம் வரும் ஜூன் 9ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

சுமார் மூன்று நிமிடங்கள் உள்ள இந்த ட்ரெய்லரில் இளம் பெண்கள் அடுத்தடுத்து மர்மமான முறையில் கொலை செய்யப்படுகின்றனர். கொலை செய்யப்பட்ட பெண்கள் அனைவரும் ஒரே மாதிரியாக கொலை செய்யப்பட்டு இருப்பதை அடுத்து ஒரு சைக்கோ கொலைகாரன் தான் இந்த கொலையை செய்திருக்க வேண்டும் என்று போலீசார் கொலைகாரனை வேட்டையாடுகின்றனர்.

சரத்குமார் மற்றும் அசோக் செல்வன் ஆகிய இருவரும் காவல்துறை அதிகாரிகளாக நடித்திருக்கும் இந்த படத்தில் அவர்கள் கொலைகாரர்களை கண்டுபிடித்தார்களா? கொலைக்கான காரணம் என்ன என்பதுதான் இந்த படத்தின் கதை என தெரிய வருகிறது.

சரத்குமார், அசோக் செல்வன், நிகிலா விமல் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான இந்த படத்தை விக்னேஷ் ராஜா என்பவர் இயக்கியுள்ளார். ஜாக்ஸ் பிஜாய் இசையில் உருவான இந்த படம் திகில் பட ரசிகர்களுக்கு விருந்தாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நீண்ட இடைவேளைக்கு பின்னர் சரத்குமாரை கம்பீரமான ஒரு காவல்துறை அதிகாரி கேரக்டரில் பார்ப்பது ரசிகர்களுக்கு திருப்தியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

யாரெல்லாம் இதை பார்த்தவுடன் Rotate செய்தது? சமந்தா புகைப் படத்திற்கு குவியும் கமெண்ட்ஸ்..!

நடிகை சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படம் ஒன்றை பதிவு செய்துள்ள நிலையில் இந்த புகைப்படத்தை யாரெல்லாம் Rotate செய்து பார்த்தது

தனுஷின் அடுத்த பட இசை வெளியீடு வெளிநாட்டிலா? ஆச்சரிய தகவல்..!

தனுஷ் நடித்து வரும் அடுத்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா வெளிநாட்டில் நடைபெற இருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் பெறும் ஆச்சரியத்தை அளித்துள்ளது

ஸ்டைலாக சிகரெட் புகை, லிப்கிஸ், படுக்கையறை காட்சிகள்: சுனைனாவின் 'ரெஜினா' டீசர்..!

நடிகை சுனைனா நடித்த ‘ரெஜினா’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விரைவில் ரிலீஸ் ஆக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டீசர் வெளியாகி இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது

ஒரு முடிவே இல்லையா? ஊர் சுற்றும் இளம் நடிகையிடம் பொறாமை பட்ட நெட்டிசன்ஸ்!

இந்திய சினிமாவில் இளம் நடிகையாக வலம்வந்து கொண்டிருக்கும் ஒருவர் தனது சகோதரியுடன் இணைந்து அமெரிக்காவிற்கு சுற்றுலா சென்றுள்ள நிலையில்

நடிகை தமன்னாவுடன் திருமணம் எப்போ? செய்தியாளர் கேள்விக்கு நடிகர் விஜய் வர்மாவின் பதில்!

இந்திய சினிமாவில் முக்கிய நடிகையாக இருந்துவரும் நடிகை தமன்னா பாலிவுட் நடிகர் விஜய் வர்மாவுடன் டேட்டிங் செய்வதாக அவ்வபோது தகவல்கள் வெளியாகி வந்தன.