நான் சொன்ன அதையே மக்கள் கேட்கல, இதை மட்டும் கேட்டுருவாங்களா?  சரத்குமார் ஆதங்கம்!

  • IndiaGlitz, [Tuesday,December 13 2022]

நான் எனக்கு ஓட்டு போடுங்கள் என்று சொன்னதையே மக்கள் கேட்கவில்லை என்றும் நான் ரம்மி விளையாட சொன்னால் மட்டும் விளையாடி விடுவார்களா என்றும் நடிகரும் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவருமான சரத்குமார் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நடிகர் சரத்குமார் சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது ரம்மி விளையாட்டுக்கு அவர் விளம்பரம் செய்வது குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அப்போது அவர், ‘ரம்மி என்பது அறிவு பூர்வமான விளையாட்டு என்றும் அதை விளையாட திறமை அவசியம் என்றும் குடும்ப தகராறில் தற்கொலை செய்து கொண்டவர்கள் எல்லாம் ஆன்லைன் ரம்மி காக தற்கொலை செய்து கொண்டனர் என்று கூறி வருகின்றனர் என்றும் தெரிவித்தார். மேலும் ரம்மி விளையாட்டுக்கு தடை சட்டம் வருவதற்கு முன்பே நான் விளம்பரத்தில் நடித்து விட்டேன் என்றும் அவர் விளக்கமளித்தார்.

மேலும் எனக்கு ஓட்டு போடுங்கள் என நான் மக்களிடம் கேட்டபோது எனக்கு யாரும் ஓட்டு போடவில்லை என்றும் நான் ரம்மி விளையாட சொன்னால் மட்டும் விளையாடுவார்களா? என்றும் அவர் ஆதங்கத்துடன் கேள்வி எழுப்பினார்.

இந்தநிலையில் ரம்மி விளையாட்டு குறித்த தடை சட்டம் தமிழக சட்டசபையில் இயற்றப்பட்டுள்ள நிலையில் அந்த சட்டத்திற்கு விரைவில் கவர்னர் அனுமதி அளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

விஜய்சேதுபதியிடம் ஏற்பட்ட திடீர் மாற்றம். ஆச்சரியத்தில் ரசிகர்கள்!

நடிகர் விஜய் சேதுபதியிடம் ஏற்பட்ட திடீர் மாற்றத்தை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர் 

அஜித்தின் அடுத்த சூறாவளி.. ஜிப்ரானின் மாஸ் அறிவிப்பு!

அஜித் நடித்த 'துணிவு' திரைப்படம் வரும் பொங்கல் தினத்தில் உலகம் முழுவதும் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாக உள்ளது என்பதும் இந்த படத்திற்காக திரையரங்குகள் ஒப்பந்தம் செய்யும்

பேரன்களுடன் ரஜினிகாந்தின் மாஸ் புகைப்படம். இணையத்தில் வைரல்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது பேரன்களுடன் மாஸாக இருக்கும் புகைப்படம் வெளியாகி உள்ள நிலையில் அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

மருத்துவக்கல்லூரி மாணவி போல் வேடமிட்ட பெண் போலீஸ்.. சினிமாவை மிஞ்சும் பரபரப்பு சம்பவம்

பெண் போலீஸ் ஒருவர் மருத்துவ கல்லூரி மாணவி போல் வேடமிட்டு மருத்துவ கல்லூரிக்கு சென்று ராக்கிங் செய்தவர்களை கண்டுபிடித்த சம்பவம் பெரும் சினிமாவை மிஞ்சும் அளவுக்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

புஷ்பவனம் குப்புசாமியின் மகள்களா இவர்கள்? வைரல் புகைப்படங்கள்!

நாட்டுப்புற பாடகர் புஷ்பவனம் குப்புசாமியின் மகள்களின் புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகின்றன.