சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சியின் 'தி லெஜண்ட்': எந்த ஓடிடியில் தெரியுமா?

  • IndiaGlitz, [Saturday,November 26 2022]

சரவணா ஸ்டோர் அண்ணாச்சி அருள் சரவணன் ஹீரோவாக நடித்து தயாரித்து ’தி லெஜண்ட்’ என்ற திரைப்படம் கடந்த ஜூலை மாதம் திரையரங்குகளில் வெளியானது என்றும் இந்த படம் வசூல் அளவில் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்றாலும் விமர்சன அளவில் பாசிட்டிவ் விமர்சனங்கள் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் திரையரங்குகளில் வெளியான ’தி லெஜண்ட்’ திரைப்படம் ஓடிடியில் எப்போது ரிலீசாகும் என ரசிகர்கள் சமூக வலைதளங்கள் மூலம் கேள்வி எழுப்பி நிலையில் இந்த படம் ஓடிடியில் வெளியாக வாய்ப்பில்லை என்று கூறப்பட்டது.

ஆனால் தற்போது இந்த படம் ஓடிடியில் விரைவில் ரிலீசாக இருப்பதாகவும் இந்த படத்தின் ரிலீஸ் உரிமையை ஹாட்ஸ்டார் நிறுவனம் இந்த படத்தின் ஓடிடி ரிலீஸ் உரிமையை வாங்கியிருப்பதாக கூறப்படுகிறது. எனவே ஹாட் ஸ்டார் நிறுவனம் ’தி லெஜண்ட்’ திரைப்படத்தை வெளியிடும் தேதியை விரைவில் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் சரவணா ஸ்டோர் அருள் சரவணன் விரைவில் அடுத்த படத்திற்காக தயாராக இருப்பதாகவும் சமீபத்தில் அவரை சுந்தர்சி சந்தித்து ஒரு கதையை கூறி இருப்பதாகவும் இந்த படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.