சினிமாவில் ஹீரோவாகும் லெஜண்ட் நியூ சரவணா ஸ்டோர்ஸ் தலைவர் லெஜண்ட் சரவணன் !

  • IndiaGlitz, [Saturday,April 20 2019]

பல கிளைகளை கொண்ட சென்னையின் மிக பிரபலமான  லெஜண்ட் நியூ  சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனம் நடுத்தர மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை குறைந்த விலையில் வழங்கி பல வருடங்களாக புகழ் பெற்று வருகிறது. இந்த நிறுவனத்தின் விளம்பரங்களில் தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர், நடிகைகள் நடிப்பதும் இந்நிறுவனத்தின் வளர்ச்சிக்கு பேருதவியாக இருந்தது

இந்த நிலையில் கடந்த சில வருடங்களாக லெஜண்ட் நியூ  சரவணா ஸ்டோர்ஸ் தலைவர் லெஜண்ட் சரவணன் , தானே தன்னுடைய நிறுவனத்தின் மாடலாக மாறி விளம்பரங்களில் நடித்து வந்தார்., முதலில் அவருடைய நடிப்பு, டான்ஸ் ஆகியவை கேலி செய்யப்பட்டாலும், அவருடைய விடா முயற்சியால் தற்போது அவர் நடிக்கும் விளம்பரங்கள் வாடிக்கையாளர்களுக்கு பழகிவிட்டது. அதுமட்டுமின்றி தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளுடன்  இணைந்து அவர் நடிப்பதால் விளம்பரங்கள் வாடிக்கையாளர்களை கவர்ந்தது

சில வருடங்களுக்கு முன் லெஜண்ட் நியூ  சரவணா ஸ்டோர்ஸ் தலைவர் லெஜண்ட் சரவணன், சினிமாவில் நடிக்கவிருப்பதாகவும் அவருக்கு ஜோடியாக முன்னணி நாயகி ஒருவர் நடிக்கவிருப்பதாகவும் ஒரு வதந்தி கிளம்பியது. ஆனால் தற்போது வெளிவந்துள்ள செய்தியின்படி இந்த வதந்தி உண்மையாகியுள்ளது. ஆம், லெஜண்ட் நியூ  சரவணா ஸ்டோர்ஸ்  தலைவர் லெஜண்ட் சரவணன்   விரைவில் ஒரு தமிழ்ப்படத்தில் ஹீரோவாக நடிக்கவுள்ளதாகவும், இந்த படத்தை முன்னணி இயக்குனர் ஒருவர் இயக்கவுள்ளதாகவும் நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து செய்தி வெளியாகியுள்ளது. இந்த படம் குறித்த முழுவிபரங்கள் இன்னும் ஒருசில நாட்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More News

மும்பை பார்ட்டியில் கலந்து கொண்ட கீர்த்திசுரேஷ் - ஜான்வி கபூர்

தமிழ், தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான கீர்த்திசுரேஷ், தற்போது பாலிவுட் படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என்பதும்

ஒருபாலின திருமணம் செய்து கொண்ட கிரிக்கெட் வீராங்கனைகள்: ரசிகர்கள் வாழ்த்து!

ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து கிரிக்கெட் வீராங்கனைகள் இருவர் காதலித்து ஒருபாலின திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

இயக்குனர்களின் 'கனா'வை நனவாக்கிய சிவகார்த்திகேயன்!

'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' உள்பட ஒருசில படங்களை இயக்கிய பொன்ராம், 'வேல்முருகன் போர்வெல்' படத்தை இயக்கிய எம்பி கோபி ஆகிய இருவரும் உசிலம்பட்டியில் உள்ள ஒரு பள்ளியில் ஒன்றாக படித்தவர்கள்

ஹர்திக் பாண்ட்யா, கே.எல்.ராகுலுக்கு ரூ.20 லட்சம் அபராதம்! ஏன் தெரியுமா?

பிரபல இந்திய கிரிக்கெட் வீர்ர்கள் ஹர்திக் பாண்ட்யா மற்றும் கே.எல்.ராகுல் ஆகிய இருவருக்கும் தலா ரூ.20 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

ஆபாச இணையதளம் பார்க்க அடையாள அட்டை! வருகிறது புதிய சட்டம்

இந்தியாவில் ஒருசில ஆபாச இணையதளங்களை அரசு தடை செய்திருந்தாலும் பெரும்பாலான ஆபாச இணையதளங்கள் இண்டர்நெட்டில் செயல்படும் வகையில் உள்ளது