close
Choose your channels

'தி லெஜண்ட்' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி இதுவா? பெரும் எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!

Monday, July 4, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சரவணா ஸ்டோர் அதிபர் சரவணன் நடித்துள்ள ’தி லெஜண்ட்’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது என்பதை ஏற்கனவே பார்த்தோம்

இந்த படம் ஜூலையில் வெளியாகும் என ஏற்கனவெ தகவல்கள் வெளியான நிலையில் தற்போது திரையரங்க உரிமையாளர்கள் மற்றும் விநியோகிஸ்தர்கள் தரப்பில் இருந்து கசிந்த தகவலின்படி இந்த படம் ஜூலை 28-ஆம் தேதி வெளியாக இருப்பதாகவும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என பான் - இந்தியா திரைப்படமாக இந்த படம் வெளியாகவுள்ளது. மிகப்பெரிய பட்ஜெட்டில் பிரமாண்டமாக தயாரிக்கப்பட்டுள்ள இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது என்பதும் அதன் பின்னர் இந்த படத்தின் எதிர்பார்ப்பு அதிகரித்தது என்பது தெரிந்ததே

லெஜண்ட் சரவணன், ஊர்வசி ரெளட்டாலா, விஜயகுமார், பிரபு, விவேக், சுமன், நாசர், லிவிங்ஸ்டர்ன், யோகிபாபு, ரோபோ சங்க உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை ஜேடி-ஜெர்ரி இயக்கியுள்ளார். ஹாரிஸ் ஜெயராஜ் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos