close
Choose your channels

இந்த முறை நான் அடிக்கிற அடி மரண அடியா இருக்கும்: 'தி லெஜண்ட்' டிரைலர்

Monday, May 30, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சரவணா ஸ்டோர் அதிபர் லெஜண்ட் சரவணன் நடித்த ‘தி லெஜண்ட்’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விரைவில் ரிலீசாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் அட்டகாசமான டிரெய்லர் வெளியாகி இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

விஞ்ஞானியாக சரவணன் நடித்திருக்கும் இந்த படத்தில், அவர் தான் படித்த படிப்பும் கண்டுபிடிப்புகளும் ஏழை எளிய மக்களுக்கு போய் சேர வேண்டும் என்ற நல்ல எண்ணத்துடன் இருக்கிறார். ஆனால் அவருடைய எண்ணத்திற்கும் வில்லன் கூட்டம் தடை போடுகிறது, பல்வேறு இடைஞ்சல்களை கொடுக்கின்றது. இதனை அவர் எப்படி சமாளித்தார்? விஞ்ஞானியான சரவணன் விஸ்வரூபம் எடுத்து எப்படி வில்லன் கூட்டத்தை எப்படி எதிர்கொள்கிறார் என்பதுதான் இந்த படத்தின் கதையாக இருக்கும் என டிரைலரில் இருந்து தெரிய வருகிறது .

மேலும் இந்த டிரைலரில் உள்ள ஒவ்வொரு பஞ்ச் வசனமும் அதிரடியாக இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். மூன்று நிமிட டிரைலரில் ஆக்ஷன் காட்சிகள், சென்டிமெண்ட் காட்சிகள், ரொமான்ஸ் காட்சிகள், காமெடி காட்சிகள் என அனைத்து அம்சங்களும் ஒருங்கே அமைந்து இருப்பதால் ஒரு நல்ல பொழுதுபோக்கு படத்தை எதிர்பார்க்கலாம் என்று தெரியவருகிறது.

ஜேடி ஜெர்ரி இயக்கத்தில், ஹாரிஸ் ஜெயராஜ் இசையில், வேல்ராஜ் ஒளிப்பதிவில் உருவாகியிருக்கும் இந்த படத்தில் சரவணன், ஊர்வசி ரெளட்டாலா, விவேக், நாசர், பிரபு, விஜயகுமார், யோகி பாபு உள்பட பலர் நடித்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.