சூப்பர்ஹிட்டான 'சர்தார்': இயக்குனருக்கு கிடைத்த சூப்பர் பரிசு!

கார்த்தி நடிப்பில் பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் உருவான ’சர்தார்’ திரைப்படம் கடந்த அக்டோபர் 21ஆம் தேதி தீபாவளி விருந்தாக வெளியானது என்பதும், இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் தெரிந்ததே.

தமிழில் மட்டுமின்றி தெலுங்கிலும் இந்த படம் நல்ல வசூலை செய்து வருகிறது என்றும் இந்தப் படம் ’விருமன்’, ’பொன்னியின் செல்வன்’ படங்களை அடுத்து கார்த்தியின் வெற்றி பட பட்டியலில் இணைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ’சர்தார்’ படத்தின் வெற்றியை அடுத்து இந்த படத்தை தயாரித்த பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம், இயக்குனர் பிஎஸ் மித்ரனுக்கு டொயோட்டா லான்சன் காரை பரிசாக அளித்துள்ளது. இந்த காரின் சாவியை நடிகர் கார்த்தி இயக்குனர் பிஎஸ் மித்ரனுக்கு வழங்கிய புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவின் சூப்பர் ஹிட் படத்தை கொடுத்த பிஎஸ் மித்ரனுக்கு இந்த பரிசு ஒரு சூப்பர் பரிசு என்பது குறிபிடத்தக்கது.

இந்தநிலையில் ’சர்தார்’ படத்தின் வெற்றியை அடுத்து இந்த படத்தின் இரண்டாம் பாக தயாரிப்பு குறித்த திட்டம் இருப்பதாகவும் விரைவில் ’சர்தார் 2’ படம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

’சர்தார்’ படத்தையடுத்து கார்த்தி தற்போது இயக்குனர் ராஜூமுருகன் இயக்கி வரும் படத்தில் நடித்து வருகிறார். இதனையடுத்து அவர் ’கைதி 2’ படத்தில் நடிக்கவிருக்கும் நிலையில் அதன்பிறகு ’சர்தார் 2’ படத்தில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

குறட்டையை மையமாக வைத்து ஒரு தமிழ்ப்படம்:  நகைச்சுவை கலந்த ஜனரஞ்சக படம்!

விக்ரம் வேதா, காலா, சில்லுக்கருப்பட்டி, ஜெய்பீம் ஆகிய பல திரைப்படங்களில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்த மணிகண்டன் முதல் முதலாக கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் ஒன்று உருவாகி உள்ளது

ஹாலிவுட் படத்திற்கு நிகரான ஆக்சன்: ஷாருக்கானின் 'பதான் ' டீசர்!

பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் ஷாருக்கான் என்பதும் அவர் நடித்து வரும் 'பதான்', 'ஜவான்', 'டைகர் 3' மற்றும் 'டங்கி' ஆகிய படங்களில் நடித்து வருகிறார். 

விஷ்ணுவிஷாலின் அடுத்த ஸ்போர்ட்ஸ் திரைப்படம்: மாஸ் ஃபர்ஸ்ட்லுக்

விஷ்ணு விஷால் நடித்த ஸ்போர்ட்ஸ் படங்களான 'வெண்ணிலா கபடி குழு' மற்றும் 'ஜீவா' ஆகிய திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது அவர் நடித்து வரும் மற்றொரு ஸ்போர்ட்ஸ் படத்தின் ஃபர்ஸ்ட்

காதலரின் புகைப்படத்தை முதல்முறையாக வெளியிட்ட ஹன்சிகா.. செம ரொமான்ஸ் புரபோஸ்!

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான ஹன்சிகாவுக்கு விரைவில் திருமணம் நடைபெற இருப்பதாகவும் அவரது தொழில் பார்ட்னர் தான் அவரை திருமணம் செய்யப்போகும் மாப்பிள்ளை என்று வெளியான

ராபர்ட்டும் ரக்சிதாவும் பக்கத்துல பக்கத்துல.. தெய்வீக காதல் போல..!

பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது விறுவிறுப்பான கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கும் நிலையில் இந்த நிகழ்ச்சியின் போட்டியாளர்களான ராபர்ட் மற்றும் ரக்சிதா ஆகிய இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்