விஜய் அந்தோணியுடன் இணைந்து சரிகம வழங்கும் இசை விருந்து!

  • IndiaGlitz, [Friday,December 18 2020]

அமேசான் பிரைம் மியூசிக் மற்றும் சரிகம இணைந்து ’கார்வான் லவுஞ்ச் தமிழ் சீசன் 1’ என்ற இசை வீருந்து ஒன்றை தனது வாடிக்கையாளர்களை மகிழ்விக்க ஏற்பாடு செய்துள்ளது. இதில் 7 வெற்றி பெற்ற தமிழ் பாடல்கள் மறுவடிவமைப்பு செய்யப்படவுள்ளது

இசையில் சிறந்த திறமைகளைக் கொண்டிருக்கும் 7 பேர் தனித்துவமான இசைக் கருவிகளுடன் மறுவடிவமைப்பு செய்யப்படுகிறது. அதேபோல் முன்னணி பாடகர்கள் இந்த பாடல்களை பாடவுள்ளனர். கார்வன் லவுஞ்ச் தமிழ் சீசன் 1 பாடல்கள் அமேசான் பிரைம் மியூசிக்  பிரைம் உறுப்பினர்கள் பிரத்யேகமாக ரசிக்கலாம்.

இதில் முதல் பாடலாக இசையமைப்பாளர், நடிகர் விஜய் ஆண்டனி மிகவும் புகழ் பெற்ற ‘நம்ம ஊரு சிங்காரி’ என்ற பாடலை மறுவடிவமைப்பு செய்துள்ளார். கமல்ஹாசன், ரஜினிகாந்த் இணைந்து நடித்த ‘நினைத்தாலே இனிக்கும்’ என்ற படத்தில் இடம்பெற்ற இந்த பாடலின் மறு வடிவமைப்பு சமீபத்தில் வெளியாகி இசை ரசிகர்களுக்கு இசை விருந்தாகியது. இந்த பாடலை விஜய் ஆண்டனி இசையமைத்து பாடியுள்ளார்.


இதேபோல் இன்னும் 6 பாடல்கள் உருவாகவிருக்கின்றது. ‘ஆயிரம் நிலவே வா’ என்ற பாடல் சத்யா இசையமைப்பில் சூரஜ் சந்தோஷ், சைந்தவி பாடவுள்ளனர். ‘கண்ணால பேசி பேசி’ பாடல் அருள்தேவ் இசையமைப்பில் விஜய் பிரகாஷ் பாடவுள்ளனர். ‘உன்னை காணாத கண்ணும்’ பாடல் கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைப்பில் தான்வி ஷா பாடவுள்ளார். ‘எங்கேயும் எப்போதும்’ பாடல் ராஜேஷ் வைத்யா மற்றும் கார்த்திக் இசையமைப்பில் கார்த்திக் பாடவுள்ளார். ‘பாடாத பாட்டெல்லாம்’ என்ற பாடல் தரண்குமார் இசையமைப்பில் சத்யபிரகாஷ் மற்றும் நித்யஸ்ரீ வெங்கட்ராமன் பாடவுள்ளனர். மற்றும் ‘குங்குமப்பூவே’ என்ற பாடல் நவீன் இசையமைப்பில் நவீன் மற்றும் சின்மயி பாடவுள்ளனர்.

More News

என் பின்பக்கத்தை தட்டினார்கள்: இளம் நடிகைக்கு மாலில் நேர்ந்த கொடுமை!

இளம் நடிகை ஒருவர் மாலுக்கு சென்ற போது தன்னுடைய பின்பக்கத்தை இரண்டு இளைஞர்கள் தட்டினார்கள் என பகீர் புகார் கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

ஆஸ்திரேலியாவை அலற வைத்த ஒரு கேட்ச்… வைரல் வீடியோ!!!

ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுடன் 3 ஒரு நாள் போட்டி, 3 டி20 போட்டிகளை முடித்துக் கொண்டு தற்போது டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வருகிறது

நான் ஏமாந்தது போல் எந்த பெண்ணும் ஏமாந்துட வேண்டாம்: 'ஷகிலா' பிரஸ்மீட்டில் ஷகிலா

மலையாள திரையுலகின் கவர்ச்சி நடிகை ஷகிலாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் 'ஷகிலா' . இந்த திரைப்படம் வரும் கிறிஸ்துமஸ் தினத்தில் வெளியாக உள்ள நிலையில்

விமானத்தில் இருந்து விழுந்தும் நொறுங்காத மொபைல்… எது தெரியுமா???

2 அடி தூரத்தில் இருந்து விழுந்தாலே போதும் நமது செல்ல மொபைல் போன்கள் பலத்த அடி வாங்கும்.

தளபதி விஜய்யின் ‘மாஸ்டர்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு?

தளபதி விஜய் நடித்த ‘மாஸ்டர்’ திரைப்படம் கடந்த ஏப்ரல் மாதமே ரிலீசுக்கு தயாராக