சர்கார் பேனர் விவகாரம்: தமிழகம் முழுவதும் விஜய் ரசிகர்கள் மீது வழக்குப்பதிவு

  • IndiaGlitz, [Friday,November 09 2018]

விஜய் நடித்த 'சர்கார்' திரைப்படம் கடந்த இரண்டு நாட்களாக பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் 'சர்கார்' பட பேனர்களை அனுமதியின்றி வைத்ததாக தமிழகத்தின் ஒருசில பகுதிகளில் விஜய் ரசிகர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சர்கார்' பட பேனர்களை காவல்துறை அனுமதியின்றி வைத்தத்தாக கரூர், நாகை மற்றும் திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் விஜய் ரசிகர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

குறிப்பாக தஞ்சையில் சர்கார் படத்திற்கு அனுமதியின்றி பேனர்கள் வைத்ததாக 25 விஜய் ரசிகர்கள் மீதும், நாகையில் அனுமதியின்றி பேனர்கள் வைத்ததாக 20 விஜய் ரசிகர்கள் மீதும், கரூரில் விஜய் ரசிகர்கள் அனுமதியின்றி பேனர்கள் வைத்ததாக 10 விஜய் ரசிகர்கள் மீதும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இவர்கள் கைது செய்யப்படுவார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

 

More News

முருகதாஸ் வீட்டிற்கு ஏன் சென்றீர்கள்? விஷால் கேள்வி

விஜய் நடித்த 'சர்கார்' படத்தை இயக்கிய இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய வேண்டும் என்று நேற்று சமூக ஆர்வலர் தேவராஜன் என்பவர் அளித்த புகாரை அடுத்து நள்ளிரவில் நேற்று போலீசார் அவரது வீட்டின்

சட்டத்திற்குப் புறம்பான செயல்? 'சர்கார்' பிரச்சனை குறித்து ரஜினிகாந்த்

விஜய் நடித்த 'சர்கார்' படத்தில் உள்ள சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க வேண்டும் என்று நேற்று அதிமுகவினர் திரையரங்குகளை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஏ.ஆர்.முருகதாஸ் வீட்டின் முன் போலீஸ் குவிந்ததால் பரபரப்பு? கைது நடவடிக்கையா?

'சர்கார்' படத்தில் ஒருசில காட்சிகள் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை அவமதிக்கும் வகையில் இருப்பதாகவும், தமிழக அரசின் இலவச திட்டங்களை சர்ச்சைக்குரிய வகையில் காட்டியிருப்பதாகவும் கூறி

சென்னை காசி தியேட்டரிலும் 'சர்கார்' பேனர் கிழிப்பு: ரசிகர்கள் அதிர்ச்சி

விஜய் நடித்த 'சர்கார்' திரைப்படம் உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளீயானது. இந்த படம் வெளியானதை அடுத்து விஜய் ரசிகர்கள் படம் வெளியாகும் திரையரங்குகள் முன் வானுயர கட் அவுட்டுக்கள் வைத்து அசத்தினர்.

'சர்கார்' படம் ஓடும் திரையரங்குகளில் திடீர் ஆய்வு: முற்றுகிறது நெருக்கடி

விஜய் நடித்த 'சர்கார்' படத்திற்கு அதிமுக அமைச்சர்கள் கண்டனம் தெரிவித்ததை முதலில் 'மெர்சல்' படத்திற்கு பாஜகவினர் கண்டனம் தெரிவித்ததை போல் சாதாரணமாக பார்க்கப்பட்டது.