close
Choose your channels
Kaatrin Mozhi

'சர்கார்' படப்பிடிப்பு குறித்து வரலட்சுமியின் முக்கிய தகவல்

Sunday, September 2, 2018 • தமிழ் Comments

தளபதி விஜய் நடித்து வரும் 'சர்கார்' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்புடன் நடந்து வந்த நிலையில் இந்த படத்தில் விஜய் சம்பந்தப்பட்ட காட்சிகள் சில நாட்களுக்கு முன் முடிவடைந்தது என்று வெளியான செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் இந்த படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் இன்றுடன் முடிவடகிறது. இதனை இந்த படத்தின் நாயகிகளில் ஒருவரான வரலட்சுமி சரத்குமார் தனது சமூக வலைத்தளத்தில் புகைப்படத்துடன் கூடிய ஒரு டுவீட்டை பதிவு செய்து உறுதி செய்துள்ளார். இந்த படத்தின் மொத்த படப்பிடிப்பும் இன்றுடன் முடிவடைதால் அடுத்தகட்டமாக முழு வேகத்தில் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் நடைபெறவுள்ளன.

வரும் தீபாவளி விருந்தாக வெளிவரவிருக்கும் 'சர்கார்' படத்தில் விஜய், வரலட்சுமி, கீர்த்திசுரேஷ், பழ.கருப்பையா, ராதாரவி, யோகிபாபு உள்பட பலர் நடித்துள்ளனர். ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இந்த படத்திற்காக கம்போஸ் செய்த பாடல்கள் வரும் அக்டோபர் 2ஆம் தேதி வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.