close
Choose your channels

அஜித் விஜய் ரசிகர்களுக்கான ஆயுதபூஜை விருந்து

Sunday, October 14, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய், கீர்த்திசுரேஷ், வரலட்சுமி நடிப்பில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகியுள்ள 'சர்கார்' திரைப்படம் வரும் தீபாவளி அன்று வெளியாகவுள்ளது. இந்த நிலையில் இந்த படத்தின் டீசர் வரும் 19ஆம் தேதி மாலை 6 மணிக்கு ஆயுதபூஜை திருநாள் விருந்தாக வெளிவரவுள்ளது என்ற அதிகார்பூர்வ அறிவிப்பு குறித்து ஏற்கனவே பார்த்தோம்

அதேபோல் தல அஜித் நடிப்பில் இயக்குனர் சிவா இயக்கத்தில் டி.இமான் இசையில் உருவாகி வரும் 'விஸ்வாசம்' திரைப்படம் வரும் பொங்கல் திருநாளில் வெளிவரவுள்ளது. இந்த நிலையில் இந்த படத்தின் மோஷன்போஸ்டர் வரும் ஆயுதபூஜை திருநாள் விருந்தாக வெளியாகவிருப்பதாகவும் இதுகுறித்த முறையான அறிவிப்பு இன்னும் ஓரிருநாட்களில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

ஆயுதபூஜை விருந்தாக ஏற்கனவே தனுஷின் 'வடசென்னை' மற்றும் விஷாலின் 'சண்டக்கோழி 2' ஆகிய திரைப்படங்கள் வெளியாகவுள்ள நிலையில் அஜித், விஜய் ரசிகர்களுக்கு விருந்தாக 'சர்கார்' மற்றும் விஸ்வாசம்' படங்களின் டீசர் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியாகவுள்ளது இருதரப்பு ரசிகர்களையும் உற்சாகமடைய செய்துள்ளது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.